புதிய மற்றும் புதுப்பிக்கத்தக்க எரிசக்தி அமைச்சகம்

பசுமை ஹைட்ரஜன் மற்றும் பசுமை அம்மோனியா திட்டங்களின் நிதி ஆதரவை அதிகரிக்க புதுப்பிக்கத்த எரிசக்தி மேம்பாட்டு முகமை உறுதிபூண்டுள்ளது: பசுமை ஹைட்ரஜன் மாநாட்டில் ஐஆர்இடிஏ தலைவர் தகவல்

Posted On: 05 AUG 2023 8:15PM by PIB Chennai

பசுமை ஹைட்ரஜன் துறையின் கணிசமான நிதித் தேவைகளை பூர்த்தி செய்வதில் முக்கிய பங்கு வகிக்க இந்திய புதுப்பிக்கத்தக்க எரிசக்தி மேம்பாட்டு முகமை (ஐஆர்இடிஏ) தயாராக உள்ளது என அதன் தலைவரும் மேலாண்மை இயக்குநருமான திரு பிரதீப் குமார் தாஸ் கூறியுள்ளார். ஒடிசா அரசு மற்றும் இந்திய தொழில் கூட்டமைப்பின் (சிஐஐ) கிழக்கு மண்டலம் புவனேஸ்வரில் ஏற்பாடு செய்திருந்த "பசுமை ஹைட்ரஜன் மாநாடு 2023"-ன் தொடக்க அமர்வில் இன்று, (ஆகஸ்ட் 5, 2023) உரையாற்றிய அவர் இதனைத் தெரிவித்தார்

 

தேசிய பசுமை ஹைட்ரஜன் இயக்கத்தில் கூறப்பட்டுள்ளபடி, அரசின் தொலைநோக்கு பார்வைக்கு இணங்க, பசுமை ஹைட்ரஜன் துறையின் முழு மதிப்பு சங்கிலிக்கும் நிதி ஆதரவு வழங்குவதில் ஐஆர்இடிஏ உறுதியுடன் உள்ளதாக அவர் கூறினார்.

 

2030 ஆம் ஆண்டிற்குள் புதைபடிவமற்ற மூலங்களிலிருந்து 500 ஜிகாவாட் மின்சாரத்தை அடையவும், 2070 க்குள் நிகர பூஜ்ஜிய உமிழ்வு என்ற இலக்கை அடையவும் இந்தியா நிர்ணயித்துள்ள இலக்குகளை அடைய  அனைவரும் ஒருங்கிணைந்து செயல்பட வேண்டும் என்று அவர் கேட்டுக் கொண்டார்.

ஒடிசா மாநிலம் ஏற்கனவே எஃகு, அலுமினியம், சிமெண்ட் மற்றும் உரங்களை உற்பத்தி செய்வதற்கான கணிசமான திறனைக் கொண்டுள்ளது என்று அவர் கூறினார்சாம்பல் அமோனியாவிலிருந்து பசுமை அம்மோனியாவுக்கு மாறுவது அடுத்த கட்டமாகும் என்று திரு பிரதீர் குமார் தாஸ் தெரிவித்தார்.

 

(Release ID: 1946102)

***

SM/PLM/KRS



(Release ID: 1946133) Visitor Counter : 97


Read this release in: English , Urdu , Hindi