அறிவியல் மற்றும் தொழில்நுட்பத்துறை
சிஎஸ்ஐஆர்-என்ஐஎஸ்சிபிஆர் இளைஞர்களிடையே காப்புரிமை குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் சிறப்பு நிகழ்ச்சியை நடத்தியது
Posted On:
03 AUG 2023 6:49PM by PIB Chennai
அறிவியல் மற்றும் தொழில்துறை ஆராய்ச்சி கவுன்சிலின் (சிஎஸ்ஐஆர்) உறுப்பு நிறுவனமான தேசிய அறிவியல் தகவல்தொடர்பு மற்றும் கொள்கை ஆராய்ச்சி நிறுவனம் (என்ஐஎஸ்சிபிஆர்) அறிவுசார் சொத்துரிமைகள் (ஐபிஆர்) குறித்த ஒரு முகாமை 31 ஜூலை 2023 அன்று நடத்தியது. ஆராய்ச்சி மாணவர்கள், விஞ்ஞானிகள் மற்றும் இளைஞர்களிடையே அறிவுசார் சொத்துரிமை குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்துவதும், புரிதலை அதிகரிப்பதும் இதன் நோக்கமாகும். ராஷ்டிரிய பவுதிக் சம்பத மஹோத்சவ் எனப்படும் தேசிய அறிவுசார் சொத்து விழா வின் நிறைவைக் குறிக்கும் வகையில் இந்த நிகழ்வுக்கு ஏற்பாடு செய்யப்பட்டது.
சிஎஸ்ஐஆர்-என்ஐஎஸ்சிபிஆரின் கண்டுபிடிப்பு குழுவின் தலைவர் டாக்டர் சுஜித் பட்டாச்சார்யா காப்புரிமைகள் குறித்த சுருக்கமான அறிமுகத்தை வழங்கினார். சிஎஸ்ஐஆர்-என்ஐஎஸ்சிபிஆரின் மூத்த முதன்மை விஞ்ஞானி டாக்டர் கனிகா மாலிக், காப்புரிமைகள் மற்றும் சம்பந்தப்பட்ட பல்வேறு செயல்முறைகள் குறித்து ஒரு தகவல் விளக்கத்தை வழங்கினார்.
இரண்டாவது அமர்வில், புதுதில்லி சி.எஸ்.ஐ.ஆர் தலைமையகத்தின் கண்டுபிடிப்பு பாதுகாப்பு பிரிவின் மூத்த முதன்மை விஞ்ஞானி திரு கௌரவ் கிருஷ்ணா காப்புரிமை தாக்கல் செயல்முறைகள், தேவையான ஆவணங்கள், கட்டணம் போன்றவை குறித்து பேசினார்.
(Release ID: 1945638)
Visitor Counter : 162