சாலைப் போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைத்துறை அமைச்சகம்
azadi ka amrit mahotsav

தேசிய நெடுஞ்சாலைகளில் சிசிடிவி கேமராக்கள்

प्रविष्टि तिथि: 03 AUG 2023 4:42PM by PIB Chennai

ஆகஸ்ட் 11, 2021 தேதியிட்ட ஜி.எஸ்.ஆர் (பொதுவான கட்டாய விதிகள்) அறிவிக்கை 575 (இ) என்பது சாலை பாதுகாப்பில் மின்னணு கண்காணிப்பு மற்றும் அமலாக்கத்திற்கு வழிவகுக்கிறது, இது தேசிய நெடுஞ்சாலைகளில் அதிக ஆபத்து மற்றும் அதிக போக்குவரத்து உள்ள வழித்தடங்களில் மின்னணு அமலாக்க சாதனங்களை நிறுவுவதை மாநில அரசுகள் உறுதி செய்ய வேண்டும் என்பதைக் கட்டாயமாக்குகிறது. இந்த மின்னணு சாதனங்களில் அதிவேகத்தை கண்காணிக்கும் கேமராக்கள், சிசிடிவி கேமராக்கள்,   உடலில் அணியும் கேமராக்கள், வாகன இருக்கை கேமராக்கள், எண் பலகை கண்டறியும் தானியங்கி கருவி, எடை இயந்திரங்கள்  மற்றும் மாநில அரசால் குறிப்பிடப்பட்ட பிற தொழில்நுட்பங்கள் அடங்கும்.

சாலை பாதுகாப்பில் சிறப்பு கவனம் செலுத்தி, போக்குவரத்து விதிமீறல்களுக்கு கடுமையான அபராதம், மின்னணு அமலாக்கம் போன்ற அம்சங்களை உள்ளடக்கிய மோட்டார் வாகன (திருத்த) சட்டம், 2019 ஐ மத்திய அரசு இயற்றியது. தேசிய நெடுஞ்சாலைகள், மாநில நெடுஞ்சாலைகள் உள்ளிட்டவற்றில், மாநில அரசுகளால் "மின்னணு கண்காணிப்பு மற்றும் சாலை பாதுகாப்பை" செயல்படுத்தவும், அதற்கான விதிகளை மத்திய அரசால் தயாரிக்கவும் திருத்தச் சட்டத்தின் பிரிவு 136 ஏ வழிவகுக்கிறது.

மேலும், இந்த அமைச்சகத்தின் சமீபத்திய சாலை மற்றும் பால விவரக்குறிப்புகள் தேசிய நெடுஞ்சாலைகளில் நிறுவுவதற்கு வழிவகுக்கிறது, இது சமீபத்திய கட்டுமான ஒப்பந்தங்களில் பின்பற்றப்படுகிறது. இதில் சிசிடிவி மற்றும் அதிவேகத்தை கண்காணிக்கும் கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளன. இந்த மேம்பட்ட போக்குவரத்து மேலாண்மை அமைப்புகளில் வேக மீறல்கள் மற்றும் பாதை நெறிமுறைகளைக் கண்டறிய முடியும்.

இத்தகவலை மத்திய சாலைப் போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைத் துறை அமைச்சர் திரு நிதின் கட்கரி மக்களவையில் எழுத்துப்பூர்வமாக அளித்த பதிலில் தெரிவித்துள்ளார்.

*****

 

ANU/SM/SMB/AG/GK


(रिलीज़ आईडी: 1945562) आगंतुक पटल : 139
इस विज्ञप्ति को इन भाषाओं में पढ़ें: English , Urdu