உள்நாட்டு விமானப் போக்குவரத்து அமைச்சகம்
azadi ka amrit mahotsav

பண்டிகை காலத்திற்கு முன்பாக விமான நிலைய நெரிசலைத் தடுக்க சிவில் விமானப் போக்குவரத்து அமைச்சகம் நடவடிக்கை எடுக்கிறது

प्रविष्टि तिथि: 03 AUG 2023 12:45PM by PIB Chennai

இந்த ஆண்டு வரவிருக்கும் பண்டிகை காலங்களில் விமான நிலைய நெரிசலைக் குறைக்க பல நடவடிக்கைகளை அமைச்சகம் மேற்கொண்டு வருகிறது. இவற்றில் பின்வரும் நடவடிக்கைகளும் அடங்கும்:

• அக்டோபர் 2023 மற்றும் நவம்பர் 2023 க்குள் இரண்டு கட்டங்களாக கூடுதல் சி.ஐ.எஸ்.எஃப் வீரர்களை பணியில் ஈடுபடுத்துதல்

• குடிவரவு பணியகத்தின் (BOI) பணியாளர் அதிகரிப்பு நடவடிக்கைகள் அக்டோபரில் தொடங்கும்.

• விமான நிலையங்களில் பாதுகாப்பு உள்கட்டமைப்பு, கூடுதல் எக்ஸ்ரே இயந்திரங்கள், செக்-இன் கவுண்டர்கள் மற்றும் விமான நிலையங்களில் கூடுதல் வசதிகள் மேம்படுத்தப்படும்.

• விமான நிலைய போக்குவரத்தை தடையற்றதாக மாற்ற பயணிகளுக்கு நிகழ்நேர புதுப்பிப்புகளை வழங்க சமூக ஊடக தளங்களைப் பயன்படுத்துதல். செயலாக்கத் திறனை மேம்படுத்துதல் மற்றும் பாதுகாப்புச் சோதனைப் பகுதிகளை விரிவுபடுத்துதல் தொடர்பான தகவல்களும் தெரிவிக்கப்படும்.

முக்கிய விமான நிலையங்களில் நெரிசல் பிரச்சினை கடந்த ஆண்டு அதிகம் இல் காணப்பட்டது. இதையடுத்து சிவில் விமானப் போக்குவரத்து அமைச்சர் திரு ஜோதிராதித்ய சிந்தியா தில்லி விமான நிலையத்திற்குச் சென்று ஏற்பாடுகளை ஆய்வு செய்தார், மேலும் தில்லி, மும்பை, பெங்களூரு, ஹைதராபாத், கொல்கத்தா மற்றும் சென்னையில் உள்ள விமான நிலையங்களில் அதிகரித்து வரும் பயணிகளின் தேவையை பூர்த்தி செய்ய திறனை அதிகரிக்குமாறு அவர் அறிவுறுத்தியிருந்தார்.

முக்கிய விமான நிலையங்களில் தேவையான உள்கட்டமைப்பை மேம்படுத்த, பல்வேறு நடவடிக்கைகள் உடனடியாக எடுக்கப்பட்டுள்ளன. புறப்படுவதற்கு முந்தைய பாதுகாப்பு சோதனைச் சாவடிகளில் எக்ஸ்ரே இயந்திரங்களின் எண்ணிக்கை கணிசமாக அதிகரிக்கப்பட்டுள்ளது. கூடுதல் நுழைவு வாயில்கள் அமைக்கப்பட்டுள்ளன.

டிஜி யாத்ரா 01.12.2022 அன்று தொடங்கப்பட்டது. தடையற்ற பயண அனுபவமான டிஜி யாத்ராவைப் பயன்படுத்த பயணிகள் ஊக்குவிக்கப்படுகிறார்கள்.

 

மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கிலச் செய்திக் குறிப்பைக் காணவும்: https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1945328

***


(रिलीज़ आईडी: 1945539) आगंतुक पटल : 188
इस विज्ञप्ति को इन भाषाओं में पढ़ें: English , Urdu , हिन्दी , Telugu