ஜவுளித்துறை அமைச்சகம்

ஜவுளித் தொழிற்சாலைகள் அமைக்க அதிநவீன உள்கட்டமைப்பு வசதிகளை ஏற்படுத்த ஒருங்கிணைந்த ஜவுளிப் பூங்கா திட்டம்

Posted On: 02 AUG 2023 6:24PM by PIB Chennai

தொழில்துறையினர் தங்கள் ஜவுளி தொழிற்சாலைகளை அமைப்பதற்கு அதிநவீன உள்கட்டமைப்பு வசதிகளை வழங்குவதற்காக ஒருங்கிணைந்த ஜவுளி பூங்கா  திட்டத்தை அரசு செயல்படுத்தி வருகிறது. சர்வதேச தரத்திலான புதிய பூங்காக்களை வளர்ச்சி மையங்களாக உருவாக்குவதே இத்திட்டத்தின் நோக்கமாகும். இத்திட்டத்தின்        கீழ் 54 ஜவுளிப் பூங்காக்களுக்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. இத்திட்டம் இதுவரை ரூ.14,243.69 கோடி முதலீட்டை ஈர்த்து, 1,05,709 பேருக்கு நேரடி / மறைமுக வேலைவாய்ப்பை உருவாக்கியுள்ளது. 

கடந்த ஐந்தாண்டுகளில் கைவினைப் பொருட்கள் உட்பட ஜவுளி மற்றும் ஆயத்த ஆடை ஏற்றுமதி மூலம் ஈட்டிய வருவாய் பின்வருமாறு: 

(மதிப்பு  மில்லியன் அமெரிக்க டாலர்களில்)

 

2017-18

2018-19

2019-20

2020-21

2021-22

மொத்த ஜவுளி மற்றும் ஆயத்த  ஆடைகள்  

35,723

36,559

33,379

29,877

42,347

கைவினைப் பொருட்கள்

1,823

1,838

1,798

1,708

2,088

ஜவுளி மற்றும் ஆயத்த  ஆடைகள் கைவினைப் பொருட்கள் உட்பட

37,546

38,397

35,177

31,585

44,435

ஆதாரம்: டிஜிசிஐ & எஸ்

 

ஒருங்கிணைந்த ஜவுளிப் பூங்கா திட்டத்தின்கீழ் தமிழ்நாட்டில் முடிக்கப்பட்டவை: பல்லடம் உயர் தொழில்நுட்ப நெசவுப் பூங்கா, பல்லடம் ; குமாரபாளையம் உயர் தொழில்நுட்ப நெசவுப் பூங்கா, கரூர் ஒருங்கிணைந்த ஜவுளிப் பூங்கா, மதுரை ஒருங்கிணைந்த ஜவுளிப் பூங்கா.

ஒருங்கிணைந்த ஜவுளிப் பூங்கா திட்டத்தின்கீழ் தமிழ்நாட்டில் அமைக்கப்பட்டு வருபவை: சைமா ஜவுளி பிராசசிங் மையம், கடலூர்; பேரறிஞர் அண்ணா கைத்தறி பட்டுப் பூங்கா; பல்லவடா ஜவுளிப் பூங்கா; தி கிரேட் இண்டியன் லினன் & ஜவுளி.

இத்தகவலை மத்திய ஜவுளித் துறை இணையமைச்சர் திருமதி தர்ஷனா ஜர்தோஷ் மக்களவையில் இன்று எழுத்துப்பூர்வமாக அளித்த பதிலில் தெரிவித்துள்ளார்.

************

(Release ID: 1945172)

 

ANU/SMB/KRS



(Release ID: 1945255) Visitor Counter : 112


Read this release in: English , Urdu