நுகர்வோர் நலன், உணவு மற்றும் பொது விநியோகம் அமைச்சகம்
பொது விநியோகத் திட்டத்தின் கீழ் சிறுதானியங்களின் விநியோகத்தை அதிகரிக்க அரசு திட்டம்
Posted On:
02 AUG 2023 6:15PM by PIB Chennai
பொதுவிநியோகத் திட்டத்தின் கீழ் சிறுதானியங்களின் விநியோகத்தை அதிகரிக்க மத்திய அரசு திட்டமிட்டுள்ளது. இதற்காக பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொள்ள முடிவு செய்யப்பட்டுள்ளது.
- கம்பு மற்றும் கேழ்வரகு ஆகிய சிறுதானியங்களின் அதிக கொள்முதல் இலக்குகளை அடைய திட்டமிட்டு செயல்படுதல்.
- பிரதமரின் ஏழைகள் மேம்பாட்டு உணவுத் (பி.எம்.ஜி.கே.ஏ.ஒய்) திட்டத்தின் கீழ் கோதுமை மற்றும் அரிசியுடன் சிறுதானியங்களை விநியோகித்தல்.
- சிறுதானியங்களை கொள்முதல் செய்யும் மாநிலங்கள் கூடுதல் இருப்பு குறித்து முன்கூட்டியே தகவல் தெரிவிக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது. பற்றாக்குறை உள்ள மாநிலங்களும் முன்கூட்டியே தகவல் தெரிரவிக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது.
- சிறுதானியங்களின் உற்பத்தியை அதிகரிப்பதன் மூலம் பயிர்களின் பல்வகைப்படுத்தலை ஊக்குவிக்குமாறு மாநிலங்கள் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளன.
- தேசிய உணவுப் பாதுகாப்புச் சட்டத்தின் கீழ் பயன்பெறும் பயனாளிகளிடையே ஊட்டச்சத்தை மேம்படுத்துவதற்காக, அனைத்து மாநிலங்களும், சிறுதானியங்களை கொள்முதல் செய்து, உள்ளூர் நுகர்வு விருப்பத்தின்படி விநியோகிக்குமாறு கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளன.
- மத்திய அரசு சிறுதானியங்களை ஊக்குவிக்க சிறப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சிகளுக்கு ஏற்பாடு செய்துள்ளது.
- வேளாண்மை மற்றும் விவசாயிகள் நலத் துறை ஜி 20 நிகழ்ச்சிகளில் சிறுதானியங்களை ஊக்குவித்து வருகிறது.
- ஹைதராபாத்தில் உள்ள இந்திய வேளாண் ஆராய்ச்சி கவுன்சில்- இந்திய சிறுதானிய ஆராய்ச்சி நிறுவனம் (ஐ.சி.ஏ.ஆர்-ஐ.ஐ.எம்.ஆர்) சமையல் கலைஞர்கள் உட்பட அனைத்து தரப்பு மக்களுக்கும் சிறுதானியங்கள் செய்முறை குறித்த பயிலரங்கை தொடர்ந்து நடத்தி வருகிறது.
இத்தகவலை மத்திய நுகர்வோர் விவகாரம், உணவு மற்றும் பொது விநியோகத் துறை இணையமைச்சர் சாத்வி நிரஞ்சன் ஜோதி மக்களவையில் இன்று எழுத்துப்பூர்வமாக அளித்த பதிலில் தெரிவித்துள்ளார்.
***
AP/ANU/PLM/RS/KPG
(Release ID: 1945229)