சமூக நிதி மற்றும் அதிகாரமளித்தல் அமைச்சகம்
பிரதமரின் குறிப்பாக பாதிக்கப்படும் பழங்குடி குழுக்கள் (பி.வி.டி.ஜி) மேம்பாட்டு இயக்கம்
Posted On:
02 AUG 2023 4:44PM by PIB Chennai
சமூக மற்றும் பொருளாதாரத்தில் பின்தங்கிய பழங்குடியினருக்கான இலக்குத் திட்டங்களை செயல்படுத்துவதற்காக, 2023-24 பட்ஜெட்டில் பிரதமரின் மிகவும் பாதிக்கப்பட்ட பழங்குடி மக்கள் மேம்பாட்டு இயக்கம் குறித்த அறிவிப்பை அரசு வெளியிட்டது.
பாதுகாப்பான வீட்டுவசதி, சுத்தமான குடிநீர், சுகாதாரம், மேம்பட்ட கல்வி, சுகாதாரம் மற்றும் ஊட்டச்சத்து, சாலை மற்றும் தொலைத்தொடர்பு இணைப்பு மற்றும் நிலையான வாழ்வாதார வாய்ப்புகள் போன்ற அடிப்படை வசதிகளுடன் இத்தகையோரின் குடும்பங்கள் மற்றும் குடியிருப்புகளை நிரப்புவதன் மூலம் குறிப்பாக பாதிக்கப்படும் பழங்குடி குழுக்களின் (பி.வி.டி.ஜி) சமூக-பொருளாதார நிலைமைகளை மேம்படுத்துவதை இந்த இயக்கம் நோக்கமாகக் கொண்டுள்ளது.
அடுத்த மூன்று ஆண்டுகளில் இத்திட்டத்தின் கீழ் மேற்கொள்ளப்பட உள்ள செயல்பாடுகளுக்கு பழங்குடியினருக்கான மேம்பாட்டு செயல்திட்டத்திலிருந்து ரூ.15,000 கோடி கிடைக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இத்தகவலை மத்திய சமூக நீதி மற்றும் அதிகாரமளித்தல் துறை இணையமைச்சர் திரு நாராயணசாமி மாநிலங்களவையில் எழுத்துப்பூர்வமாக அளித்த பதிலில் தெரிவித்துள்ளார்.
****
ANU/AP/SMB/KPG
(Release ID: 1945210)
Visitor Counter : 132