சமூக நிதி மற்றும் அதிகாரமளித்தல் அமைச்சகம்
நாட்டில் மனிதக் கழிவுகளை மனிதர்களே அகற்றும் முறையை ஒழிப்பதற்கான நடவடிக்கை
Posted On:
02 AUG 2023 4:46PM by PIB Chennai
06.12.2013 முதல் நடைமுறைக்கு வரும் வகையில் மனிதக் கழிவுகளை அகற்ற தொழிலாளர்களை வேலைக்கு அமர்த்துவதைத் தடை செய்தல் மற்றும் அவர்களின் மறுவாழ்வுச் சட்டம், 2013 (எம்.எஸ் சட்டம், 2013)" இயற்றப்பட்டது. இச்சட்டத்தின் விதிகளின்படி, மனிதக் கழிவுகளை மனிதர்களே அகற்றும் முறை தடைசெய்யப்பட்டுள்ளது, மேலும் அந்த தேதியிலிருந்து எந்தவொரு நபரும் அல்லது நிறுவனமும் எந்தவொரு நபரையும் மனிதக் கழிவுகளை அகற்றுவதற்கு ஈடுபடுத்தவோ அல்லது பணியமர்த்தவோ முடியாது. எம்.எஸ் சட்டம் 2013 இன் விதிகள் மீறுபவர்களுக்கு அபராதம் அல்லது சிறைத்தண்டனை அல்லது இரண்டும் விதிக்கப்படும் என்று குறிப்பிடுகிறது.
எந்த மாவட்டத்திலும் மனிதக் கழிவுகளை மனிதர்களே அகற்றும் முறையை ஒழிப்பதற்கான தகவல் இல்லை. அனைத்து மாவட்டங்களும் இதிலிருந்து விடுபட்டதாக அறிவிக்க வேண்டும் அல்லது அதனுடன் தொடர்புடைய சுகாதாரமற்ற கழிப்பிடம் மற்றும் மனிதக் கழிவுகளை அகற்றுபவர்களின் தரவுகளை "ஸ்வச்தா அபியான்" மொபைல் பயன்பாட்டில் பதிவேற்றுமாறு அமைச்சகம் கேட்டுக் கொண்டுள்ளது. இருப்பினும், இதுவரை பயன்பாட்டில் நம்பகமான தரவுகள் எதுவும் பதிவேற்றப்படவில்லை.
580 மாவட்டங்களில் இருந்து தரவுகள் சேகரிக்கப்பட்டு, அவை மனிதக் கழிவுகளை மனிதர்களே அகற்றும் முறை இல்லாத மாவட்டங்களாக அறிவிக்கப்பட்டுள்ளன.
அமைச்சகம் மாநிலங்கள் மற்றும் மாவட்டங்களுக்கு பல்வேறு மட்டங்களில் பல தகவல்தொடர்புகளை அனுப்புகிறது மற்றும் இது தொடர்பான உறுதிப்படுத்தலை விரைவுபடுத்த அவர்களுடன் வழக்கமான சந்திப்புகளை எடுத்து வருகிறது.
எஸ்.ஆர்.எம்.எஸ். திட்டத்தின் பெயர் "இயந்திரமயமாக்கப்பட்ட துப்புரவு சுற்றுச்சூழல் அமைப்புக்கான தேசிய நடவடிக்கை" (நமஸ்தே) என மாற்றப்பட்டுள்ளது. மேலும், துப்புரவுத் தொழிலாளர்களின் மறுவாழ்வை உறுதி செய்வதற்காக எஸ்.ஆர்.எம்.எஸ்ஸின் தற்போதைய கூறுகள் நமஸ்தே திட்டத்தின் ஒரு அங்கமாக வைக்கப்பட்டுள்ளன.
இத்தகவலை மத்திய சமூக நீதி மற்றும் அதிகாரமளித்தல் துறை இணையமைச்சர் ராம்தாஸ் அத்வாலே மாநிலங்களவையில் எழுத்துப்பூர்வமாக அளித்த பதிலில் தெரிவித்துள்ளார்.
***
ANU/AP/PKV/AG/KPG
(Release ID: 1945207)
Visitor Counter : 305