மீன்வளம், கால்நடை பராமரிப்பு மற்றும் பால்வளத் துறை அமைச்சகம்
azadi ka amrit mahotsav

தேசிய பால்வள மேம்பாட்டுத் திட்டம்

Posted On: 01 AUG 2023 5:44PM by PIB Chennai

கால்நடை பராமரிப்பு மற்றும் பால்வளத் துறை, பிப்ரவரி 2014 முதல் நாடு முழுவதும் தேசிய பால்வள மேம்பாட்டுத் திட்டத்தை செயல்படுத்தி வருகிறது. இத்திட்டத்தை 2021-22 முதல் 2025-26 வரை பின்வரும் இரண்டு கூறுகளுடன் செயல்படுத்துவதற்காக ஜூலை 2021இல் மறுசீரமைக்கப்பட்டுள்ளது.

(i)    மாநில கூட்டுறவு பால் கூட்டமைப்புகள் / மாவட்ட கூட்டுறவு பால் உற்பத்தியாளர்கள் சங்கம் / சுய உதவிக் குழுக்கள் / பால் உற்பத்தி நிறுவனங்கள் / உழவர் உற்பத்தி அமைப்புகளுக்கான தரமான பால் பரிசோதனை உபகரணங்கள் மற்றும் முதன்மை குளிரூட்டும் வசதிகளுக்கான உள்கட்டமைப்பை உருவாக்குதல் / வலுப்படுத்துவதில் தேசிய பால்வள மேம்பாட்டுத் துறையின் கூறு கவனம் செலுத்துகிறது.

(ii)    “கூட்டுறவுகள் மூலம் பால்வளம்என்ற தேசிய பால்வள மேம்பாட்டுத் திட்டத்தின் கூறு பி’, பால் மற்றும் பால் பொருட்களின் விற்பனையை அதிகரிப்பதை நோக்கமாகக் கொண்டுள்ளது; இது ஒழுங்கமைக்கப்பட்ட சந்தைக்கான விவசாயிகளின் அணுகலை அதிகரிப்பதன் மூலமும், பால் பதப்படுத்தும் வசதிகள் மற்றும் சந்தைப்படுத்தல் உள்கட்டமைப்பை மேம்படுத்துவதன் மூலமும், உற்பத்தியாளருக்குச் சொந்தமான நிறுவனங்களின் திறனை அதிகரிப்பதையும் நோக்கமாகக் கொண்டுள்ளது.

தேசிய பால்வள மேம்பாட்டுத் திட்டத்தின் கீழ் கடந்த மூன்று ஆண்டுகளில் மாநில வாரியான ஒதுக்கீடுகள் எதுவும் செய்யப்படவில்லை. இந்நிலையில் தமிழ்நாட்டிற்கு வழங்குவதற்காக ஒப்புதல் அளிக்கப்பட்ட   236.80 கோடி ரூபாயில் மத்திய அரசின் பங்கு ரூ. 167.88 கோடியாகும்.  கடந்த மூன்றாண்டுகளில் மாநிலத்திற்கு ரூ. 70.83 கோடி விடுவிக்கப்பட்டு, அதில் ரூ. 66.92 கோடி பயன்படுத்தப்பட்டுள்ளது. இதேபோல புதுச்சேரிக்கு  கடந்த மூன்று ஆண்டுகளில் விடுவிக்கப்பட்ட 0.39 கோடி ரூபாய் முழுவதும் பயன்படுத்தப்பட்டுள்ளது.

தேசிய பால்வள மேம்பாட்டுத் திட்டத்தின் கூறு பி-யின் கீழ், சுத்தமான பால் உற்பத்தி மற்றும் நல்ல சுகாதார நடைமுறைகள், கறவை மாடுகள் வளர்ப்பு, கால்நடை தீவனம், பசுந்தீவனம் மற்றும் தாதுக் கலவை போன்றவை குறித்து விவசாயிகளுக்கு பயிற்சிகள் வழங்கப்படுகின்றன.  மறுசீரமைக்கப்பட்ட திட்டத்தின் கீழ் பயிற்சி நடவடிக்கைகளுக்கு மாநில வாரியாக அங்கீகரிக்கப்பட்ட விவசாயிகளின் எண்ணிக்கையின் படி (25.07.2023 நிலவரப்படி) தமிழ்நாட்டில் 75677 விவசாயிகளும் புதுச்சேரியில் 1000 விவசாயிகளும் உள்ளனர்.

இந்தத் தகவலை மத்திய மீன்வளம், கால்நடை பராமரிப்பு மற்றும் பால்வளத்துறை அமைச்சர் திரு பர்ஷோத்தம் ரூபாலா மக்களவையில் எழுத்துப்பூர்வமாக அளித்த பதிலில் தெரிவித்துள்ளார்.

மேலும் விவரங்களுக்கு இந்த செய்திக் குறிப்பை ஆங்கிலத்தில் இங்கே காணலாம்:https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1944753

***

ANU/BU/AG


(Release ID: 1944921) Visitor Counter : 148


Read this release in: English , Urdu