சமூக நிதி மற்றும் அதிகாரமளித்தல் அமைச்சகம்
சமூக நீதி மற்றும் அதிகாரமளித்தல் அமைச்சகம் போதை குறைப்புக்கான தேசிய செயல் திட்டத்தை அறிமுகப்படுத்தியுள்ளது.
Posted On:
01 AUG 2023 4:45PM by PIB Chennai
மத்திய சமூக நீதி மற்றும் அதிகாரமளித்தல் அமைச்சகம் போதைப்பொருள் தேவை குறைப்புக்கான தேசிய செயல் திட்டத்தை (என்ஏபிடிடிஆர்) அறிமுகப்படுத்தியுள்ளது, இது (1) நோய்த்தடுப்பு கல்வி மற்றும் விழிப்புணர்வை உருவாக்குதல், திறன் மேம்பாடு, முன்பு போதைக்கு அடிமையானவர்களுக்கு தொழிற்பயிற்சி மற்றும் வாழ்வாதார ஆதரவு, மாநிலங்கள் / யூனியன் பிரதேசங்களின் போதை தேவையைக் குறைப்பதற்கான திட்டங்கள் போன்றவற்றுக்கு நிதி உதவி வழங்கும் ஒரு ஒருங்கிணைந்த திட்டமாகும். போதைக்கு அடிமையானவர்களுக்கான ஒருங்கிணைந்த மறுவாழ்வு மையங்கள் ஏற்படுத்தப்பட்டுள்ளன. இளம் பருவத்தினரிடையே ஆரம்பகால போதைப்பொருள் பயன்பாட்டைத் தடுப்பதற்கான சமூக அடிப்படையிலான தலையீடு, மாவட்ட போதை மறுவாழ்வு மையங்கள், அரசு மருத்துவமனைகளில் போதை சிகிச்சை வசதிகள் ஆகியவை செயல்பட்டு வருகின்றன.
சமூக நீதி மற்றும் அதிகாரமளித்தல் அமைச்சகத்தால் ஆகஸ்ட் 15,2020 அன்று தொடங்கப்பட்ட மையங்கள் அடையாளம் காணப்பட்ட மிகவும் பாதிக்கப்படக்கூடிய 372 மாவட்டங்களில் செயல்படுத்தப்படுகிறது. இதுவரை, களத்தில் மேற்கொள்ளப்பட்ட பல்வேறு நடவடிக்கைகள் மூலம், 3.34 கோடி இளைஞர்கள் மற்றும் 2.22 கோடி பெண்கள் உட்பட, 10.47 கோடி மக்களுக்கு போதைப்பொருள் பயன்பாடு குறித்த விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டுள்ளது.
3.23 லட்சத்திற்கும் மேற்பட்ட கல்வி நிறுவனங்களின் பங்களிப்பு, இந்த திட்டத்தின் செய்தி நாட்டின் குழந்தைகள் மற்றும் இளைஞர்களை சென்றடைவதை உறுதி செய்துள்ளது.
போதைப்பொருள் இல்லாத தேசிய ஆன்லைன் உறுதிமொழியில் 99,595 கல்வி நிறுவனங்களைச் சேர்ந்த 1.67+ கோடி மாணவர்கள் போதைப்பொருள் இல்லாதவர்களாக இருப்போம் என்று உறுதிமொழி எடுத்தனர்.
வாழும் கலை, பிரம்மா குமாரிகள் மற்றும் சந்த் நிரங்கரி மிஷன் போன்ற ஆன்மீக / சமூக சேவை அமைப்புகளுடன் புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கையெழுத்திடப்பட்டுள்ளன.
நாட்டில் சமூக நீதி மற்றும் அதிகாரமளித்தல் துறையால் ஆதரிக்கப்படும் போதை மறுவாழ்வு மையங்களின் எண்ணிக்கை குறிப்பாக மாநில வாரியாக பிற்படுத்தப்பட்ட மற்றும் கிராமப்புற பிரிவுகளை உள்ளடக்கியதுஇணைப்பு-1 இல் இணைக்கப்பட்டுள்ளது.
கடந்த மூன்றாண்டுகள் மற்றும் நடப்பாண்டில் மாநில வாரியாக மேற்கண்ட மையங்களுக்கு ஒதுக்கப்பட்ட நிதி விவரங்கள்இணைப்பு-2ல் இணைக்கப்பட்டுள்ளன.
தமிழ்நாட்டிற்கு , 2020-21, 2021-22, 2022-23 நிதியாண்டுகளில் முறையே, ரூ. 5.66 கோடி, ரூ. 4.95 கோடி, ரூ. 5.19 கோடி விடுவிக்கப்பட்டுள்ளது.
புதுச்சேரிக்கு, ரூ. 0.66 கோடி, ரூ. 0.22 கோடி, ரூ. 0.43 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது.
இத்தகவலை மத்திய சமூக நீதி மற்றும் அதிகாரமளித்தல் துறை இணையமைச்சர் நாராயணசாமி மக்களவையில் எழுத்துப்பூர்வமாக அளித்த பதிலில் தெரிவித்துள்ளார்.
(Release ID: 1944693)
ANU/AP/PKV/KRS
***
(Release ID: 1944836)