சிறப்பு சேவைகள் மற்றும் கட்டுரைகள்
azadi ka amrit mahotsav

சான்சிபார் வளாகத்திற்கு சென்னை ஐஐடி விண்ணப்பங்களைக் கோரியுள்ளது


தரவு அறிவியல் மற்றும் செயற்கை நுண்ணறிவில் 4 ஆண்டு இளங்கலை மற்றும் 2 ஆண்டு முதுகலை ஆகிய இரண்டு படிப்புகளுக்கு இணையதளத்தில் விண்ணப்பிக்க 2023, ஆகஸ்ட் 5 கடைசி நாளாகும்

Posted On: 01 AUG 2023 1:38PM by PIB Chennai

சென்னையில் உள்ள இந்திய தொழில்நுட்பக் கழகம் (ஐஐடி) அதன் சான்சிபார் வளாகம் வழங்கும் படிப்புகளுக்கு விண்ணப்பங்களை வரவேற்றுள்ளது.

சென்னை ஐ.ஐ.டி-யின் சான்சிபார் வளாகம்,  தகுதிகளைப் பொறுத்து தரவு அறிவியல் மற்றும் செயற்கை நுண்ணறிவு ஆகியவற்றில் நான்கு ஆண்டு இளநிலை அறிவியல் பட்டம் அல்லது தரவு அறிவியல் மற்றும் செயற்கை நுண்ணறிவு ஆகியவற்றில் இரண்டு ஆண்டு முதுநிலை தொழில்நுட்பப் பட்டம் ஆகியவற்றை வழங்குகிறது. இந்தியர்கள் உட்பட அனைத்து நாட்டு மாணவர்களும் இந்த பாடப் பிரிவுகளில் சேரலாம்.

இங்கிலாந்து மற்றும் ஆஸ்திரேலியாவில் உள்ள சென்னை ஐ.ஐ.டி-யின் கூட்டாளர் நிறுவனங்களுடன் வெளிநாட்டில் படிப்பது / செமஸ்டர் பரிமாற்ற திட்டங்கள்பல்வேறு தொடர்புடைய நிறுவனங்களுடன் உள்நிலைப் பயிற்சி மற்றும் இந்தியாவின் சென்னையில் உள்ள ஐ.ஐ.டி வளாகத்தில் சில படிப்பு தேவைகளை பூர்த்தி செய்வதற்கான வாய்ப்பும் இதில் அடங்கும்.

விண்ணப்பங்களை இணையதளத்தில் சமர்ப்பிக்க வேண்டும். விண்ணப்பிப்பதற்கான கடைசி  தேதி 2023, ஆக்ஸ்ட் ஆகும். கட்டணம்தங்குமிடம் மற்றும் வாழ்க்கைச் செலவுகள்மாதிரி வினாத்தாள்கள்நிதி உதவி மற்றும் பிற விவரங்கள் உள்ளிட்ட கூடுதல் தகவல்களை https://zanzibar.iitm.ac.in  என்ற இணையதளத்தில் காணலாம் 

மாணவர் சேர்க்கை செயல்முறை குறித்து ஐ.ஐ.டி மெட்ராஸ் சான்சிபார் வளாகத்தின் பொறுப்பாளரும் பொறியியல் மற்றும் அறிவியல் பள்ளியின் டீனுமான பேராசிரியர் பிரீத்தி அகிலம் கூறுகையில்கடந்த மூன்று ஆண்டுகளில் பன்னிரெண்டாம் வகுப்புபடிவம் அல்லது அதற்கு சமமான தேர்ச்சி பெற்றவர்கள் இளநிலை  பட்டத்திற்கும்ஏதேனும் பொறியியல் / அறிவியல் பிரிவில் ஆண்டு இளநிலை பட்டம் பெற்றவர்கள் எம்.டெக் பட்டத்திற்கும் விண்ணப்பிக்க தகுதியுடையவர்கள் என்றார்.  தகுதியானதிறமையான மாணவர்களுக்கு நிதி உதவி கிடைக்கும் என்றும் அவர் கூறினார்.  

கூடுதல் தகவல்களை கீழ்கண்ட மின்னஞ்சல் முகவரிக்கு எழுதுவதன் மூலமோ - iitm_zanzibar@ge.iitm.ac.in அல்லது பின்வரும் எண்ணைத் தொடர்புகொள்வதன் மூலமோ பெறலாம்: +91 90433 38564 (வாட்ஸ்அப்)

***

AD/SMB/GK


(Release ID: 1944686)
Read this release in: English