உள்நாட்டு விமானப் போக்குவரத்து அமைச்சகம்
உடான் திட்டத்தின் கீழ் குறைந்த செலவிலான மண்டல விமானப் போக்குவரத்து இணைப்பை மேம்படுத்துதல்
Posted On:
31 JUL 2023 4:29PM by PIB Chennai
மண்டல இணைப்புத் திட்டமான ஆர்.சி.எஸ் திட்டத்தில் விமானங்களை இயக்க, தேர்ந்தெடுக்கப்பட்ட விமான நிறுவனம் விமானங்களை இயக்கத் தொடங்குவதற்கு தேவையான ஒப்புதல்கள் மற்றும் சான்றிதழை சிவில் விமானப் போக்குவரத்து இயக்குநரகத்திடம் இருந்து பெற வேண்டும்.
மண்டல விமான இணைப்பில் செலவுக் குறைப்பை ஊக்குவிப்பது உடான் திட்டத்தின் முக்கிய அம்சமாகும். இத்திட்டத்தின் கீழ் வழங்கப்படும் சலுகைகள் பின்வருமாறு:
• விமான நிலைய செயல்பாட்டாளர்கள் (ஆபரேட்டர்கள்) ஆர்.சி.எஸ் விமானங்களில் தரையிறக்கம் மற்றும் பார்க்கிங் கட்டணங்களை வசூலிக்க மாட்டார்கள்.
• ஆர்.சி.எஸ் விமானங்களில் எந்த டெர்மினல் நேவிகேஷன் லேண்டிங் கட்டணத்தையும் (டி.என்.எல்.சி) ஏ.ஏ.ஐ வசூலிக்காது.
• இத்திட்டம் அறிவிக்கப்பட்ட நாளிலிருந்து மூன்று ஆண்டுகளுக்கு ஆர்.சி.எஸ் விமான நிலையங்களிலிருந்து எஸ்.ஏ.ஓ.க்கள் வாங்கும் விமான டர்பைன் எரிபொருளுக்கு (ஏ.டி.எஃப்) 2% கலால் வரி விதிக்கப்படும்.
• உள்நாட்டு மற்றும் சர்வதேச விமான நிறுவனங்களுடன் குறியீடு பகிர்வு ஏற்பாடுகளில் ஈடுபட எஸ்.ஏ.ஓ.க்களுக்கு சுதந்திரம் இருக்கும்.
• மாநிலங்களுக்குள் அமைந்துள்ள ஆர்.சி.எஸ் விமான நிலையங்களில் ஏடிஎஃப் மீதான மதிப்புக் கூட்டு வரியை 1% அல்லது அதற்கும் குறைவாக 10 ஆண்டுகளுக்கு நிர்ணயித்தல்.
• ஆர்.சி.எஸ். மேம்பாட்டிற்கு தேவைப்பட்டால், குறைந்த பட்ச நிலத்தை இலவசமாக வழங்குதல்.
• ஆர்.சி.எஸ் விமான நிலையங்களில் பாதுகாப்பு மற்றும் தீயணைப்பு சேவைகளை இலவசமாக வழங்குதல்.
• கணிசமான சலுகை விலையில் மின்சாரம், நீர் மற்றும் பிற பயன்பாட்டு சேவைகளை வழங்குதல்
சிவில் விமானப் போக்குவரத்துத் துறை இணை அமைச்சர் திரு வி.கே.சிங் இன்று மாநிலங்களவையில் எழுத்துப்பூர்வமாக அளித்த பதிலில் இந்த தகவலைத் தெரிவித்தார்.
************
ANU/PLM/KRS
(Release ID: 1944496)
Visitor Counter : 99