தொழிலாளர் மற்றும் வேலைவாய்ப்பு அமைச்சகம்
கிக் தொழிலாளர்களுக்கு சமூகப் பாதுகாப்பு
Posted On:
31 JUL 2023 5:40PM by PIB Chennai
அமைப்புசாரா தொழிலாளர்கள் உள்ளிட்ட தொழிலாளர்களுக்கு சட்டரீதியான குறைந்தபட்ச ஊதியம், சமூகப் பாதுகாப்பு, சுகாதாரம் ஆகியவற்றின் அடிப்படையில் கிடைக்கும் பயன்களை உறுதிப்படுத்த நான்கு தொழிலாளர் சட்டங்கள் வகை செய்கின்றன. இவை அனைத்து வகையான வேலைவாய்ப்புகளையும் உள்ளடக்குவதை நோக்கமாகக் கொண்டுள்ளன, மேலும் "ஊழியர்", "தொழிலாளர்", "கிக் தொழிலாளர்", "பிளாட்ஃபார்ம் தொழிலாளர்", "அமைப்புசாரா தொழிலாளர்" "வீட்டு வேலை தொழிலாளர்", "ஒப்பந்தத் தொழிலாளர்" "மாநிலங்களுக்கு இடையே புலம்பெயர்ந்த தொழிலாளர்", "கட்டிடத் தொழிலாளர்", "கூலித் தொழிலாளர்", "மோட்டார் போக்குவரத்துத் தொழிலாளர்", "ஆடியோ-விஷுவல் தொழிலாளர்" போன்ற பல்வேறு பிரிவுகளையும் வரையறுத்துள்ளன.
உடல் ஊனத்திற்கான காப்பீடு, விபத்துக் காப்பீடு, சுகாதாரம் மற்றும் மகப்பேறு சலுகைகள், முதியோர் பாதுகாப்பு போன்ற விஷயங்களில் கிக் தொழிலாளர்கள் மற்றும் பிளாட்ஃபார்ம் தொழிலாளர்களுக்கு பொருத்தமான சமூகப் பாதுகாப்புத் திட்டங்களை உருவாக்க சமூகப் பாதுகாப்புச் சட்டம், 2020 வழிவகுக்கிறது. சமூகப் பாதுகாப்பு நிதியத்தை அமைப்பதற்கும் இது வழிவகுக்கிறது, மேலும் நிதி ஆதாரங்களில் ஒன்றாக இருப்பது மொத்த வருடாந்திர வருவாயில் 1 முதல் 2% வரையிலான மொத்தப் பங்களிப்பு ஆகும், இத்தகைய தொழிலாளர்களுக்கு மொத்தத்தில் செலுத்தப்பட்ட அல்லது செலுத்த வேண்டிய தொகையில் 5% வரம்பிற்கு உட்பட்டது.
இத்தகவலை மத்திய தொழிலாளர் மற்றும் வேலைவாய்ப்புத் துறை இணையமைச்சர் திரு. ராமேஸ்வர் தெலி இன்று மக்களவையில் எழுத்துப்பூர்வமாக அளித்த பதிலில் தெரிவித்துள்ளார்.
***
ANU/AP/SMB/KPG
(Release ID: 1944463)
Visitor Counter : 150