குறு சிறு மற்றும் நடுத்தர தொழில் துறை அமைச்சகம்
azadi ka amrit mahotsav

குறுந்தொழில் நிறுவனங்களுக்கு ஆதரவு

இடுகை இடப்பட்ட நாள்: 31 JUL 2023 4:05PM by PIB Chennai

25.07.2023 நிலவரப்படி, உதயம் (Udyam) தளத்தில் பதிவு செய்யப்பட்ட மொத்த சிறு, குறு மற்றும் நடுத்தர நிறுவனங்களின் எண்ணிக்கை 1,77,37,338 ஆகும். இதில் முறையே 96 சதவீதம், 3 சதவீதம், 0.3 சதவீதம் குறு, சிறு மற்றும் நடுத்தர நிறுவனங்கள் ஆகும்.

உதயம் தள தகவலின்படி பதிவு செய்யப்பட்ட குறுந்தொழில்களில் 90 சதவீதம் ரூ. 50 லட்சம் வரை நிகர விற்றுமுதல் கொண்டுள்ளன.

குறு, சிறு மற்றும் நடுத்தரத் தொழில்கள் அமைச்சகம், நாட்டில் உள்ள குறு மற்றும் சிறு தொழில்களை ஆதரிக்க பல கொள்கை முன்முயற்சிகளை எடுத்துள்ளது.

11.01.2023 அன்று உதயம் அசிஸ்ட் பிளாட்ஃபார்ம் (UAP) எனப்படும் உதயம் உதவி தளம் தொடங்கப்பட்டது. இது முன்னுரிமைத் துறை கடன்களின் (PSL) கீழ் பலன் பெறுவதற்கான முறையான வரம்பிற்குள் முறைசாரா சிறு நிறுவனங்களைக் (IMEs) கொண்டுவருகிறது.

கொள்முதல் மற்றும் சந்தைப்படுத்தல் ஆதரவு திட்டத்தின் கீழ், வழங்கப்படும் பல சலுகை அம்சங்கள் குறு மற்றும் சிறு நிறுவனங்களுக்கு நன்மை அளிக்கின்றன.

பிரதமரின் வேலைவாய்ப்பு உருவாக்கத் திட்டம் (PMEGP) கிராமப்புற மற்றும் நகர்ப்புறங்களில் விவசாயம் அல்லாத துறையில் குறு நிறுவனங்களை நிறுவுவதன் மூலம் வேலை வாய்ப்புகளை உருவாக்குகிறது.

கடன் விநியோக முறையை வலுப்படுத்தவும், பிணைய மற்றும் மூன்றாம் தரப்பு உத்தரவாதம் தொடர்பான தொந்தரவுகள் இல்லாமல் குறு மற்றும் சிறு நிறுவனங்களுக்கு கடன் நடைமுறைகளை எளிதாக்கவும் கடன் உத்தரவாதத் திட்டம் (CGS) செயல்படுத்தப்படுகிறது..

இத்தகவலை, மாநிலங்களவையில் இன்று எழுத்துப்பூர்வமாக அளித்த பதிலில், குறு சிறு மற்றும் நடுத்தர தொழில்கள் துறை இணையமைச்சர் திரு பானு பிரதாப் சிங் வர்மா தெரிவித்துள்ளார்.

                                                                                                      ********

ANU/PLM/KPG

 


(வெளியீட்டு அடையாள எண்: 1944389) வருகையாளர் எண்ணிக்கை : 173
இந்த வெளியீட்டை படிக்க: English , हिन्दी , Punjabi , Telugu