சுற்றுச்சூழல் மற்றும் வனத்துறை அமைச்சகம்
உலக சுற்றுச்சூழல் பாதுகாப்பு தினம்
प्रविष्टि तिथि:
28 JUL 2023 6:55PM by PIB Chennai
புதுதில்லியில் உள்ள தேசிய உயிரியல் பூங்காவில் (டெல்லி மிருகக்காட்சி சாலை) இன்று உலக சுற்றுச்சூழல் பாதுகாப்பு தினம் கடைபிடிக்கப்பட்டது. 2022-ம் ஆண்டின் உலக சுற்றுச்சூழல் பாதுகாப்பு தினத்தின் கருப்பொருள் "வனங்கள் மற்றும் வாழ்வாதாரங்கள்: மக்கள் மற்றும் பூமியை நிலைநிறுத்துதல்" என்பதாகும்.
இந்த நிகழ்ச்சிகள், கழிவுகளைக் குறைப்பதில் உள்ள நடைமுறையின் முக்கியத்துவத்தை நிவர்த்தி செய்வதற்காகவும், நமது சுற்றுச்சூழலில் எதிர்மறையான தாக்கத்தைக் குறைக்க உதவுவதற்கும் "கழிவுப் பொருட்களைப் பிரித்தல்" மற்றும் "பயனுள்ள தயாரிப்புகளுக்கு கழிவுகளை பிரித்தல்" ஆகிய சுற்றுச்சூழலுக்கான வாழ்க்கை முறையின் இலக்குகளை வழங்குவதுடன் தொடங்கப்பட்டன. விளக்க உரைக்கு பின் நடத்தப்பட்ட டூடுல் நிகழ்ச்சியில், மாணவர்கள் ஆர்வமுடன் பங்கேற்றனர்.
இந்த நிகழ்ச்சியை தேசிய உயிரியல் பூங்காவில் ஏற்பாடு செய்திருந்ததன் நோக்கம், இயற்கை மற்றும் அதன் சுழலுக்கு நெருக்கமாக இருப்பதன் மூலம் சுற்றுச்சூழலுக்கான வாழ்க்கை முறை என்ற கருத்தை ஊக்குவிப்பதும் மாணவர்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்துவதும் ஆகும். சுற்றுச்சூழலுக்கான வாழ்க்கை முறை திட்டம் குறித்து உறுதிமொழியும் எடுக்கப்பட்டது.
****
ASD/DL
(रिलीज़ आईडी: 1943984)
आगंतुक पटल : 167