சட்டம் மற்றும் நீதித்துறை அமைச்சகம்
நியாய விகாஸ் இணையதளம்
प्रविष्टि तिथि:
28 JUL 2023 5:13PM by PIB Chennai
இஸ்ரோவின் தேசிய தொலையுணர்வு மையத்தின் தொழில்நுட்ப உதவியுடன் நீதிமன்ற அரங்குகள் மற்றும் குடியிருப்பு அலகுகளில் பணிகள் குறித்த முன்னேற்றம் தொடர்பான தரவுகளை சேகரிக்க நியாய விகாஸ் இணையதள கண்காணிப்பு அமைப்பு உருவாக்கப்பட்டுள்ளது.
இவை தொடர்பான கட்டுமான திட்டங்களை கண்காணிக்க, 'நியாய விகாஸ்' என்ற இணையதளம் மற்றும் மொபைல் செயலி உருவாக்கப்பட்டுள்ளது. நடைபெறும் பணிகள் மற்றும் முடிக்கப்பட்ட திட்டங்கள் தொடர்பான தரவுகள் மற்றும் தகவல்களை உள்ளிடவும் பதிவேற்றவும் மாநில அரசுகள் மாநில அளவில் ஒருங்கிணைப்பு அதிகாரிகளையும், நில அளவையாளர்கள் மற்றும் நடுவர்களை நியமித்துள்ளன. நியாய விகாஸ் மொபைல் செயலியைப் பயன்படுத்தி நீதித்துறை உள்கட்டமைப்பு திட்டங்கள் சிறப்பாக கண்காணிக்கப்படுகிறது.
30.06.2023 நிலவரப்படி, 7,410 நீதிமன்ற அரங்குகள் (முடிக்கப்பட்ட, கட்டப்பட்டு வரும் மற்றும் முன்மொழியப்பட்ட நீதித்துறை கட்டுமானத் திட்டங்கள்) மற்றும் 7,287 குடியிருப்பு அலகுகள் (முடிக்கப்பட்ட, கட்டுமானத்தில் உள்ள மற்றும் முன்மொழியப்பட்ட கட்டுமான திட்டங்கள்) தொடர்பான விவரங்கள் இணையதளத்தில் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளன.
இத்தகவலை மத்திய சட்டம் மற்றும் நீதித்துறை அமைச்சர் அர்ஜூன் ராம் மேக்வால் மக்களவையில் இன்று எழுத்துப்பூர்வமாக அளித்த பதிலில் தெரிவித்துள்ளார்.
*****
ANU/PLM/KRS
(रिलीज़ आईडी: 1943845)
आगंतुक पटल : 137