சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறை அமைச்சகம்
அவசர சிகிச்சை மருத்துவமனைப் பிரிவுகளை நிறுவுவது குறித்த தகவல்
இடுகை இடப்பட்ட நாள்:
28 JUL 2023 3:27PM by PIB Chennai
பிரதமரின் ஆயுஷ்மான் பாரத் சுகாதார உள்கட்டமைப்பு இயக்கத்தின் கீழ் 5 லட்சத்திற்கும் அதிகமான மக்கள் தொகை கொண்ட அனைத்து மாவட்டங்களிலும் 602 தீவிர சிகிச்சை மருத்துவமனை பிரிவுகளை அமைக்க நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
தேசிய சுகாதார இயக்கத்தின் தற்போதைய கட்டமைப்பு, நிறுவனங்கள் மற்றும் வழிமுறைகளைப் பின்பற்றுவதன் மூலம் இத்திட்டத்தின் அம்சங்கள் செயல்படுத்தப்படுகின்றன. மாநில அரசுகளிடமிருந்து முன்மொழிவுகள் பெறப்பட்டு, மாநில மற்றும் மத்திய அதிகாரிகள் கூட்டாக பங்கேற்கும் தேசிய திட்ட ஒருங்கிணைப்புக் குழுவின் (என்.பி.சி.சி) கூட்டத்தில் விரிவான விவாதத்தின்படி, இந்த முன்மொழிவுகளுக்கு விதிமுறைகளின் படி மத்திய அரசு ஒப்புதல் அளிக்கிறது.
இத்திட்டத்தின் கீழ் தமிழ்நாட்டுக்கு சிசிபி எனப்படும் அவசர சிகிச்சை மருத்துவமனைப் பிரிவுகள் 37-ம் புதுச்சேரிக்கு 3-ம் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
மத்திய சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறை இணையமைச்சர் டாக்டர் பாரதி பிரவீன் பவார் மக்களவையில் இன்று எழுத்துப்பூர்வமாக அளித்த பதிலில் இதனைத் தெரிவித்துள்ளார்.
*****
ANU/PLM/KPG
(வெளியீட்டு அடையாள எண்: 1943817)
வருகையாளர் எண்ணிக்கை : 140