பழங்குடியினர் நலத்துறை அமைச்சகம்
ராஜஸ்தானில் 6 ஈஎம்ஆர்எஸ்.களை பிரதமர் இன்று தொடங்கி வைத்தார்
தற்போதைய அரசு கல்விக்கான வரவுசெலவுத் திட்டத்தையும் வளங்களையும் அதிகரித்து வருகிறது. ஏகலைவா மாதிரி உறைவிடப் பள்ளிகளைத் திறந்திருப்பது பழங்குடியின இளைஞர்களுக்கு பெரிதும் பயனளித்துள்ளது : பிரதமர்
Posted On:
27 JUL 2023 5:56PM by PIB Chennai
ராஜஸ்தான் மாநிலத்தின் உதய்பூர் (2), பன்ஸ்வாரா (2), பர்தாப்கர் (1) மற்றும் துங்கர்பூர் (1) ஆகிய மாவட்டங்களில் அமைந்துள்ள 6 ஏகலைவா மாதிரி உறைவிடப் பள்ளிகளை பிரதமர் திரு. நரேந்திர மோடி இன்று திறந்து வைத்தார். இப்பள்ளிகள் கட்டப்படுவதன் மூலம் 2880 பழங்குடியின மாணவர்களில் பாதி அளவில் உள்ள மாணவிகள் பயனடைவார்கள்.
பல தசாப்தங்களாக, கிராமங்களில் நல்ல பள்ளிகள் மற்றும் கல்வி இல்லாததால் கிராமங்களும் ஏழைகளும் பின்தங்கியுள்ளனர் என்று கூறிய பிரதமர், பிற்படுத்தப்பட்ட மற்றும் பழங்குடி சமூகங்களின் குழந்தைகள் தங்கள் கனவுகளை நிறைவேற்ற எந்த வழியும் இல்லை என்று வருந்தினார். தற்போதைய அரசு கல்விக்கான வரவுசெலவுத் திட்டத்தையும் வளங்களையும் அதிகரித்தது மற்றும் ஏகலைவா மாதிரி உறைவிடப் பள்ளிகளைத் திறந்திருப்பது பழங்குடியின இளைஞர்களுக்கு பெரிதும் பயனளித்துள்ளது என்று திரு. மோடி குறிப்பிட்டார்.
ராஜஸ்தானில் மொத்தம் 31 பள்ளிகளுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது. இன்று உதய்பூர், பன்ஸ்வாரா, பர்தாப்கர் மற்றும் துங்கர்பூர் ஆகிய இடங்களில் அமைந்துள்ள 6 பள்ளிகளை பிரதமர் திறந்து வைத்தார். ஒவ்வொரு பள்ளியிலும் 480 மாணவர்கள் படிக்கின்றனர், அவர்களில் 240 பேர் மாணவிகள். இப்பள்ளிகளில் மாணவ, மாணவிகளுக்கு தனித்தனி விடுதி, ஊழியர்களுக்கான தங்குமிடம், சாப்பாட்டு அறை மற்றும் விளையாட்டு மைதானம் ஆகியவை அமைக்கப்படும். சமவெளிப் பகுதிகளில் ரூ. 38 கோடியிலும், மலைப்பகுதிகளில் ரூ. 48 கோடியிலும் இப்பள்ளிகள் கட்டப்பட்டு வருகின்றன.
ஈஎம்ஆர்எஸ், சாரதா, உதய்பூர்
ஈஎம்ஆர்எஸ், லசாடியா, உதய்பூர்
ஈஎம்ஆர்எஸ், பீபல்கண்ட், பிரதாப்கர்
ராஜஸ்தான் புள்ளிவிவரங்கள் ஒரு பார்வை
திட்டம் / தலையீடு 2013-14 2022-23
அனுமதி அளிக்கப்பட்ட பள்ளிகள் 8 31
ராஜஸ்தான் மாநிலத்தில் உதய்பூர் (8), பன்ஸ்வாரா (6), துங்கர்பூர் (4), பிரதாப்கர் (4), ஆல்வார் (2), ஜெய்ப்பூர் (2), டோங்க் (1), கருலி (1), பாரா (1), சிரோஹி (1), சவாய்-மாதோபூர் (1) உள்பட 31 ஈஎம்ஆர்எஸ் (எண்ணிக்கையில் உள்ள புள்ளிவிவரங்கள் பள்ளிகளின் எண்ணிக்கையைக் காட்டுகின்றன). 31 பள்ளிகளில், 24 பள்ளிகளில் ஏற்கனவே கட்டுமானப் பணிகள் முடிக்கப்பட்டுள்ளன. 7 பள்ளிகள் கட்டுமானத்தில் உள்ளன. அவை 2023 டிசம்பருக்குள் முடிவடையும் என எதிர்பார்க்கப்படுகிறது. தற்போது, 8,925 மாணவ, மாணவியர் அங்கு படிக்கின்றனர். அனைத்து பள்ளிகளும் கட்டி முடிக்கப்படும் போது, 14 ஆயிரத்து, 880 மாணவர்கள், இப்பள்ளிகளில் கல்வி பயில்வார்கள். பில், கேமெட்டி, கராசியா, மீனா, சஹாரியா ஆகியவை ஈ.எம்.ஆர்.எஸ் மூலம் பயனடையும் முக்கிய பழங்குடியினர் பகுதியாகும். பழைய பள்ளிகள் ரூ. 5 கோடி செலவில் தரம் உயர்த்தப்பட்டு வருவதுடன், ஜல் ஜீவன் திட்டத்தின் கீழ் சாலை கட்டமைப்பு மற்றும் குடிநீர் வழங்குவதற்கும் நிதி அளிக்கப்படுகிறது.
பிரதமர் திரு. நரேந்திர மோடியின் தொலைநோக்கு பார்வையுடனான தலைமையின் கீழ், 50% அல்லது அதற்கு மேற்பட்ட பழங்குடியின மக்கள் தொகை மற்றும் 20,000 கொண்ட ஒவ்வொரு பழங்குடி வட்டாரத்திலும் ஒன்று என 740 ஏகலைவா மாதிரி உறைவிட பள்ளிகள் அமைக்கப்பட்டு வருகின்றன.
2021-22 ஆம் ஆண்டில் 452 புதிய ஈஎம்ஆர்எஸ் பள்ளிகளுக்கு கட்டுமான செலவு சமவெளி மற்றும் மலைப்பகுதிகளில் ரூ. 20 கோடி மற்றும் ரூ. 24 கோடியிலிருந்து முறையே ரூ. 38 கோடி மற்றும் ரூ. 48 கோடியாக உயர்த்தப்பட்டது. அடுத்த 3 ஆண்டுகளில் படிப்படியாக 38,000 ஆசிரியர்கள் நியமிக்கப்படுவார்கள்.
• 2013-14 ஆம் ஆண்டில் 167 பள்ளிகளுக்கு அனுமதி வழங்கப்பட்ட நிலையில், தற்போது 693 ஆக உயர்ந்துள்ளது.
• 2013-14 ஆம் ஆண்டில் 119 பள்ளிகள் செயல்பட்டு வந்த நிலையில், தற்போது 401 பள்ளிகள் செயல்பட்டு வருகின்றன.
• கடந்த 5 ஆண்டுகளில் 110 பள்ளிகளில் கட்டடம் கட்டி முடிக்கப்பட்டுள்ளது.
இந்திய அளவிலான புள்ளிவிவரங்கள் ஒரு பார்வை
திட்டம் / தலையீடு 2013-14 2023-24
வரவு செலவுத் திட்ட ஒதுக்கீடு ரூ. 278.76 கோடி
(அரசியலமைப்பின் 275 (1) ஆம் உறுப்புரையின் கீழ் ஒரு அங்கமாக ரூ.4000 கோடி
(தனி மத்தியத் துறைத் திட்டம்)
அனுமதி அளிக்கப்பட்ட பள்ளிகள் 167 693
செயல்படும் பள்ளிகள் 119 401
தொடர் செலவுகள் ஒரு மாணவருக்கு ஆண்டுக்கு ரூ. 42,000
ஒரு மாணவருக்கு ஆண்டுக்கு ரூ. 1,09,000
மூலதன செலவு ரூ.12.00 கோடி (சமவெளி)
ரூ.16 கோடி (மலைப்பகுதி, வடகிழக்கு, இடதுசாரி தீவிரவாத பகுதிகள்) ரூ.37.80 கோடி (சமவெளி),
ரூ.48 கோடி (மலைப்பகுதி, வடகிழக்கு, இடதுசாரி தீவிரவாத பகுதிகள்)
சி.பி.எஸ்.இ.யுடன் இணைந்த பள்ளிகள் 69 277
பதிவு செய்த பள்ளிகள் 34365 113275
***
LK/AM/RJ
(Release ID: 1943767)
Visitor Counter : 125