சிறப்பு சேவைகள் மற்றும் கட்டுரைகள்
NEP 2020: ஒவ்வொரு மாணவருக்கும் ஒரு பிரகாசமான புதிய பார்வை
Posted On:
28 JUL 2023 12:30PM by PIB Chennai
மாண்புமிகு பிரதமர் ஸ்ரீ நரேந்திர மோடி அவர்கள் புது தில்லியில் NEP 2020 மூன்றாவது ஆண்டு கொண்டாட்டத்தில் இணைவதற்கான அடையாள நடவடிக்கையாக கேந்திரிய வித்யாலயாவில் ஒரு செய்தியாளர் சந்திப்பு கூட்டப்பட்டது கேந்திரிய வித்யாலயா 1, ஜிப்மர் வளாகத்தில் கேந்திரிய வித்யாலயா முதல்வர், ஜவகர் நவோதயா வித்யாலயா முதல்வர் மற்றும் சிபிஎஸ்சி முதல்வர்கள் செய்தியாளர் சந்திப்பில் கலந்து கொண்டனர் செய்தியாளர் சந்திப்பில் தலைமை தாங்கிய பள்ளி முதல்வர் ஸ்ரீ ஜோஸ் மேத்யூ NEP 2020ஐ, திறம்பட செயல்படுத்துவதன் மூலம் கல்வியின் அடிமட்ட நிலையை மறு வரையறை செய்வதற்காக இந்திய அரசு எடுத்துள்ள நடவடிக்கைகளை பாராட்டினார். NEP 2020 ஒவ்வொரு மாணவருக்கும் ஒரு புதிய பார்வையை திறப்பதாக பாராட்டினார். கேந்திரிய வித்யாலயா தொடங்கப்பட்டதிலிருந்து செயல்படுத்திய மாற்றங்கள் மற்றும் மேம்பாடுகள் குறித்து அவர் விவாதித்தார். பாலவாதிகா 1,2,3 வகுப்புகள் முதல் கட்ட அமலாக்கத்தில் தொடங்குவதற்காக இந்தியா முழுவதும் தேர்ந்தெடுக்கப்பட்ட 49 பள்ளிகளில் கேவி நம்பர் ஒன் ஜிப்மர் ஒன்றாக இருப்பது குறித்து அவர் மகிழ்ச்சி தெரிவித்தார். பாலவாதிகாவில் வழங்கப்பட்ட அடிப்படை கல்வி அறிவு மற்றும் எண் கணிதத்திற்கு பிறகு மாணவர்களின் மன வயதிற்கு ஏற்றவாறு ஒன்றாம் வகுப்பு செயற்கைக்கான வயதை மறு சீரமைப்பது குறித்து அவர் பேசினார்.
NEP2020, சமூக பொருளாதார பின்தங்கிய குழு, கல்வியின் வெளிச்சத்திற்கு கொண்டுவரப்படுவதற்கான சூழலை உறுதி செய்கிறது என்று அவர் கூறினார் தாய்மொழி அல்லது பல மொழிகளின் பயன்பாட்டிற்கு NCF முக்கியத்துவம் கொடுப்பது, அடிப்படை கல்வி அறிவை தூண்டுவதற்கு ஒரு ஊக்கியாக செயல்படுகிறது என்று அவர் கூறினார். மேலும் மாணவர்களின் திறன்கள் மற்றும் கலாச்சார விழிப்புணர்வு, அவர்களை வழிநடத்துகிறது என்றார் கல்வியியல் தன்மை மற்றும் பாடத்திட்ட தேவைகள் மற்றும் அவர்களுக்கான மூன்று மாத விளையாட்டு அடிப்படையிலான கற்பித்தல், கற்றல் திட்டம் ஆகியவற்றின் அடிப்படையில் 6+ வயதில் ஒன்றாம் வகுப்பில் சேர்க்கை வயதை மறுசீரமைப்பது குறித்து அவர் பேசினார். வித்யா பிரவேசம் என்பது மாணவர்களை கற்றல் உலகிற்கு வரவேற்கும் ஒரு நேர்மையான நடவடிக்கை. இரண்டாம் வகுப்பு வரைவிலான ஐந்தாண்டு கால அடிப்படை நிலையும், ஐந்தாம் வகுப்பு வரையிலான மூன்றாண்டுகள் ஆயத்த படிப்பும், எட்டாம் வகுப்பு முதல் மூன்றாண்டுகள் இடைநிலை படிப்பும், 12ஆம் வகுப்பு வரையிலான நான்காண்டுகள் இடைநிலை படிப்பும் இளைஞர்களை வளமானவர்களாக மாற்றுவதில் தன் தகுதியை நிரூபிக்க போகிறது என்று கூறினார்.
நிபுன் ஆவணத்தில் உள்ள வகுப்பு வாரியான கற்றல் முடிவுகளின் பதிவு, நடப்பு கல்வியாண்டில் III வகுப்பில் இயங்குவதால் , மாணவர்கள் FLN ஐ அடைவதை உறுதி செய்கிறது என்று அவர் கூறினார்.
வித்யாலயாக்கள் தச்சு, மட்பாண்டங்கள் , முகமூடி தயாரித்தல், தையல், எம்பிராய்டரி போன்ற சில தேவையான படிப்புகளை VI-VIII வகுப்புகளுக்கு முன் தொழில் திறன் பாடங்களாகவும், NEP 2020 க்கு ஏற்ப செயற்கை நுண்ணறிவு VIII-XII வகுப்பிலிருந்து தொழில்சார் பாடமாகவும் அறிமுகப்படுத்தியுள்ளன .
அவரது உரையில் , NEP 2020 ஆசிரியர் மைய அணுகுமுறையிலிருந்து கற்றலை மையப்படுத்திய அணுகுமுறைக்கும், பயிற்சி முறையிலிருந்து அனுபவ கற்றல் முறைக்கும், விமர்சன சிந்தனை, கருத்தியல் புரிதல் மற்றும் படைப்பாற்றல் ஆகியவற்றுக்கு முக்கியத்துவம் அளித்து, தொழில்நுட்பம் மற்றும் ஆசிரியர்-பயிற்சியால் ஆதரிக்கப்படும் பல துறைகளின் மூலம் கற்பித்தல் மாற்றத்தை வெளிச்சம் போட்டுக் காட்டியது. ஆரம்ப ஆசிரியர்களுக்கான 'பொம்மை அடிப்படையிலான கற்பித்தல்' மற்றும் கற்பித்தல்-கற்றலின் ஒவ்வொரு நிலையிலும் விரும்பிய முடிவைக் கொண்டுவர நிஷ்தா -I , II & III , ஆசிரியர்களுக்கான பல்வேறு பயிற்சித் திட்டங்களைப் பற்றி அவர் பேசினார்.
பள்ளி மற்றும் திறமையான தன்னார்வத் தொண்டர்கள், ஆகியோருக்கு இடையேயான தொடர்புக்கான வழிமுறையாக DIKSHA PORTAL, PM e-VIDYA பிளாட்ஃபார்ம், ஸ்வயம் பிரபா TV சேனல்கள் மற்றும் ரேடியோ மற்றும் மொபைல் போட்காஸ்ட்கள் (PODCASTS) பல்வேறு வழிகளில் அனைத்து வகை மாணவர்களுக்கும் கல்விக்கான வளங்களை வழங்குகின்றன.
NEP 2020 இன் பரிந்துரைகளைப் பின்பற்றி, போதுமான உள்கட்டமைப்புகள் கிடைப்பதையும், புதுப்பிக்கும் செயல்முறையையும் வலியுறுத்தி அவர் தனது உரையை முடித்தார்
ஸ்ரீ.ஜோஸ் மேத்யூ, முதல்வர், கேந்திரிய வித்யாலயா, ஸ்ரீ.கண்ணதாசன் , முதல்வர் ஜவஹர் நவோதயா நடேசன் காங்கேயன் முதல்வர், ஆதித்ய வித்யாஷ்ரம் செய்தியாளர் சந்திப்பில் கலந்து கொண்டனர்.
***
(Release ID: 1943520)
Visitor Counter : 130