பணியாளர் நலன், பொதுமக்கள் குறை தீர்ப்பு மற்றும் ஓய்வூதியங்கள் அமைச்சகம்
இம்பாலை மையமாக தேர்வு செய்த விண்ணப்பதாரர்கள் அய்சால், தில்லி, திஸ்பூர், ஜோர்ஹட், கோஹிமா, கொல்கத்தா, ஷில்லாங் ஆகிய எந்த மையத்திலும் மாறுவதற்கும் எழுதுவதற்கும் யுபிஎஸ்சி அனுமதி அளித்துள்ளது என்று மத்திய அமைச்சர் டாக்டர் ஜிதேந்திர சிங் கூறியுள்ளார்
இடுகை இடப்பட்ட நாள்:
27 JUL 2023 3:56PM by PIB Chennai
இம்பாலை மையமாகத் தேர்ந்தெடுத்த வேட்பாளர்கள், அய்சால், டெல்லி, திஸ்பூர், ஜோர்ஹாட், கோஹிமா, கொல்கத்தா மற்றும் ஷில்லாங் ஆகிய எந்த மையத்திலும் மாறுவதற்கும் எழுதுவதற்கும் யுபிஎஸ்சி அனுமதி அளித்துள்ளது என்று மத்திய அறிவியல் மற்றும் தொழில்நுட்பத் துறை இணையமைச்சர் (தனிப்பொறுப்பு) பிரதமர் அலுவலகத்தின் பணியாளர், மக்கள் குறைகள், ஓய்வூதியம், அணுசக்தி மற்றும் விண்வெளித் துறை இணை அமைச்சர் டாக்டர் ஜிதேந்திர சிங் கூறியுள்ளார்.
மாநிலங்களவையில் கேள்வி ஒன்றுக்கு எழுத்துப்பூர்வமாக பதிலளித்த டாக்டர் ஜிதேந்திர சிங், சிவில் சர்வீசஸ் (முதல்நிலை) தேர்வு, 2023 (28.05.2023 அன்று நடைபெற்றது) மற்றும் தொழிலாளர் வருங்கால வைப்பு நிதி அமைப்பில் (ஈபிஎஃப்ஓ) கணக்கு அதிகாரி / அமலாக்க அதிகாரி மற்றும் உதவி வருங்கால வைப்பு நிதி ஆணையர் (ஏபிஎஃப்சி) க்கான ஆட்சேர்ப்பு தேர்வுகளில் (02.07.2023 அன்று நடைபெற்றது) இந்த அனுமதி வழங்கப்பட்டதாக தெரிவித்தார்.
மணிப்பூரில் பல்வேறு தேர்வுகளை நடத்துவதற்காக பணியாளர் தேர்வு ஆணையம் மூன்று (3) மையங்களைக் கொண்டுள்ளது என்றும் டாக்டர் ஜிதேந்திர சிங் கூறினார். இருப்பினும், பல்வகை பணிகளுக்கான (தொழில்நுட்பம் அல்லாதது) ஊழியர்கள் மற்றும் ஹவில்தார் (சிபிஐசி & சிபிஎன்) தேர்வு, 2022-ல் மணிப்பூர் வேட்பாளர்களுக்கு வடகிழக்கில் ஐஸ்வால், கோஹிமா போன்ற மாற்று மையங்கள் வழங்கப்பட்டன. மேலும், வேட்பாளர்கள் இந்தியாவில் எங்கு வேண்டுமானாலும் தங்கள் விருப்ப மையத்தை மாற்றுவதற்கான வாய்ப்புகளும் வழங்கப்பட்டன.
***
ANU/SMB/KPG
(வெளியீட்டு அடையாள எண்: 1943433)
வருகையாளர் எண்ணிக்கை : 155