வீட்டு வசதி மற்றும் நகர்ப்புற வறுமை ஒழிப்பு அமைச்சகம்
azadi ka amrit mahotsav

அம்ருத் திட்டத்தின் கீழ் பின்பற்றப்படும் முறை

Posted On: 27 JUL 2023 4:06PM by PIB Chennai

குடிநீர் வழங்கல் மற்றும் துப்புரவுப் பணிகள் மாநில விவகாரம். இருப்பினும், நகர்ப்புறங்களில் குடிநீர் வசதிகள் மற்றும் கழிவுநீரகற்று உள்கட்டமைப்பு போன்ற அடிப்படை சேவைகளுக்கான உள்கட்டமைப்பை வழங்குவதில் மாநிலங்கள் மற்றும் நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளின் (யு.எல்.பி) முயற்சிகளுக்கு மத்திய அரசு துணைபுரிகிறது.  நகர்ப்புறங்களில் குடிநீர் விநியோகம் மற்றும் சுகாதாரத்தின் சவால்களை அகற்றுவதற்காக, அம்ருத் இயக்கத்தின் பரந்த கட்டமைப்பிற்குள் திட்டங்களைத் தேர்ந்தெடுக்கவும், விளக்கவும், முன்மொழியவும், வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற விவகாரங்கள் அமைச்சகத்தின் (எம்.ஓ.எச்.யு.ஏ) தலைமைக் குழுவின் ஒப்புதலுக்குப் பிறகு செயல்படுத்தவும் மாநிலங்கள் / யூனியன் பிரதேசங்களுக்கு   அம்ருத் இயக்கம் சுதந்திரத்தை   வழங்குகிறது 

திட்டங்களின் முன்னேற்றத்தைக் கண்காணிக்க ஒரு பிரத்யேக அம்ருத் போர்ட்டல் உள்ளது. மாநில / யூனியன் பிரதேசம் (யுடி) போர்ட்டலில் உள்ள தரவை தவறாமல் புதுப்பிக்க வேண்டும். மாநிலங்கள்/ யூனியன் பிரதேசங்கள் மற்றும் அதன் நகரங்களுக்கு பிரச்சினைகளைத் தீர்ப்பதற்கும், திட்டங்களை சரியான நேரத்தில் முடிப்பதற்கான தடைகளை நீக்குவதற்கும் மிஷன் இயக்குநரகம் அவ்வப்போது கைகோர்க்கும் ஆதரவை வழங்குகிறது. இந்த இயக்கத்தை விரைவாக செயல்படுத்துவதற்காக, மாநிலங்கள் / யூனியன் பிரதேசங்கள் மற்றும் அவற்றின் நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளுடன் (யு.எல்.பி) அமைச்சகம் அவ்வப்போது வீடியோ மாநாடுகள், வெபினார்கள், பட்டறைகள் போன்றவற்றின் மூலம் முன்னேற்றம் ஆய்வு செய்யப்பட்டு கண்காணிக்கப்படுகிறது. மேலும், மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் மேற்கொள்ளப்படும் பணிகளை மதிப்பிடுவதற்கும் கண்காணிப்பதற்கும் பிரத்யேக  மறுஆய்வு மற்றும் கண்காணிப்பு முகமைகள் (ஐஆர்எம்ஏ) இந்த இயக்கத்தில் அமைக்கப்பட்டுள்ளன. எனவே, திட்டமிடப்பட்ட வெளியீடுகளை அடைவது சிறந்த சேவை வழங்கலுக்கும் குடிமக்களின் வாழ்க்கையை எளிதாக்குவதற்கும் வழிவகுக்கும்.

தூய்மை இந்தியா இயக்கம்-நகர்ப்புற மற்றும் ஸ்மார்ட் சிட்டி இயக்கங்கள் அம்ருத் இயக்கத்துடன் நகர அளவில் ஒருங்கிணைக்கப்பட்டுள்ளன.

இத்தகவலை மத்திய வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற விவகாரங்கள் துறை இணையமைச்சர் கவுஷல் கிஷோர் மக்களவையில் எழுத்துப்பூர்வமாக அளித்த பதிலில் தெரிவித்துள்ளார்.

----

ANU/PKV/KPG

 


(Release ID: 1943358) Visitor Counter : 175
Read this release in: English , Urdu , Telugu