அணுசக்தி அமைச்சகம்

அணு உலை விபத்துகளுக்குப் போதுமான காப்பீடு வழங்கப்படுகிறது: மத்திய அமைச்சர் டாக்டர் ஜிதேந்திர சிங்

Posted On: 26 JUL 2023 4:44PM by PIB Chennai

நாட்டில் நடக்கும் அணு உலை விபத்துகளுக்கு, போதுமான காப்பீடு வழங்கப்படுவதாக மத்திய அறிவியல் மற்றும் தொழில்நுட்பத் துறை இணையமைச்சர் (தனிப்பொறுப்பு) பிரதமர் அலுவலகம், பணியாளர் நலன், பொதுமக்கள் குறைதீர்ப்பு, ஓய்வூதியம், அணுசக்தி மற்றும் விண்வெளித் துறை இணை அமைச்சர் டாக்டர் ஜிதேந்திர சிங் கூறியுள்ளார்.

மக்களவையில்  கேள்விஒன்றுக்கு எழுத்துபூர்வமாக பதிலளித்த டாக்டர் ஜிதேந்திர சிங், "அணுசக்தி சேதத்திற்கான சிவில் பொறுப்பு (சி.எல்.என்.டி) சட்டம் 2010-ஐ இந்தியா இயற்றியுள்ளது. இது அணுசக்தி சேதத்திற்கான சிவில் பொறுப்பு மற்றும் அணு விபத்தில் பாதிக்கப்பட்டவர்களுக்கு உடனடி இழப்பீடு ஆகியவற்றை வழங்குகிறது. இச்சட்டத்தின் கீழ், அணுசக்தி சம்பவம் தொடர்பாக தனது பொறுப்பை ஈடுகட்டுவதற்காக அணு உலையை நிவகிப்பவர்  காப்பீடு அல்லது நிதி பத்திரங்கள் அல்லது இரண்டின் கலவையை பராமரிக்க வேண்டும். இச்சட்டம் ஒவ்வொரு அணுசக்தி சம்பவத்திற்கும் அணுசக்தி அணு உலையை நிவகிப்பவரின் பொறுப்பையும் வரையறுக்கிறது.

எந்தவொரு காப்பீடு அல்லது நிதி பத்திரங்கள் இல்லாமல், அணுசக்தி ஆபரேட்டர் அணுசக்தி அமைப்புகளை இயக்க முடியாது என்றும், செல்லுபடியாகும் காலம் முடிவடைவதற்கு முன்பு, காப்பீட்டு பாலிசி அல்லது நிதி பத்திரங்களை அவ்வப்போது புதுப்பிக்க ஆபரேட்டர் கட்டாயப்படுத்தப்படுகிறார் என்றும் அமைச்சர் தெரிவித்தார்.

ஒவ்வொரு அணு உலை விபத்துக்கும் ஒரு ஆபரேட்டரின் பொறுப்பு:

(i)   பத்து மெகாவாட்டுக்குச் சமமான அல்லது அதற்கு மேற்பட்ட அனல் மின்சாரம் கொண்ட அணு உலைகளைப் பொறுத்தவரை, ஆயிரத்து ஐநூறு கோடி ரூபாய்;

(ii)   செலவழிக்கப்பட்ட எரிபொருள் மறுசுழற்சி ஆலைகளைப் பொறுத்தவரை, முந்நூறு கோடி ரூபாய்;

(iii)   பத்து மெகாவாட்டிற்குக் குறைவான அனல் மின்சக்தி கொண்ட ஆராய்ச்சி உலைகள், எரிபொருள் மறுசுழற்சி நிலையங்கள் அல்லாத எரிபொருள் சுழற்சி அமைப்புகள், அணுசக்திப் பொருட்களைக் கொண்டு செல்லுதல் ஆகியவற்றைப் பொறுத்தவரை, நூறு கோடி ரூபாய்.

2016 ஆம் ஆண்டில் துணை இழப்பீட்டுக்கான உடன்படிக்கையை (சி.எஸ்.சி) இந்தியா அங்கீகரித்துள்ளது. அணுசக்தி விபத்து ஏற்பட்டால், ஒப்பந்தத் தரப்பினர் தங்களின் நிறுவப்பட்ட அணுசக்தி திறன் மற்றும் ஐ.நா மதிப்பீட்டு விகிதத்தின் அடிப்படையில் பொது நிதி மூலம் கிடைக்கும் இழப்பீட்டுத் தொகையை அதிகரிப்பதை இது நோக்கமாகக் கொண்டுள்ளது.

***

(Release ID: 1942866)

ANU/SMB/KRS



(Release ID: 1943067) Visitor Counter : 88


Read this release in: English , Marathi , Telugu