நிலக்கரி அமைச்சகம்
சட்டவிரோத சுரங்க நடவடிக்கைகளைத் தடுக்க நடவடிக்கை
Posted On:
26 JUL 2023 3:46PM by PIB Chennai
கோல் இந்தியா லிமிடெட் நிறுவனம், நிலக்கரி உற்பத்தியின் போது, பல்வேறு சட்டங்கள், விதிகள் மற்றும் ஒழுங்குமுறைகளின் கீழ் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. அனைத்து சட்ட விதிகளும் முறையாக்க் கடைபிடிக்கப்படுகின்றன. எனவே, கோல் இந்தியா லிமிடெட் நிறுவனத்தின் குத்தகைப் பகுதிகளில் சட்டவிரோத சுரங்கம் எதுவும் நடைபெறவில்லை. எவ்வாறாயினும், சட்டவிரோத நிலக்கரி சுரங்கம் முக்கியமாக கைவிடப்பட்ட சுரங்கங்கள், தொலைதூர / தனிமைப்படுத்தப்பட்ட இடங்களில் அமைந்துள்ள ஆழமற்ற நிலக்கரி படிவங்களிலிருந்து மேற்கொள்ளப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இது ஒரு சட்டம் ஒழுங்கு பிரச்சினையாகும், இது ஒரு மாநில விவகாரம். எனவே முதன்மையாக; சட்டவிரோத நிலக்கரி சுரங்கத்தை நிறுத்த / தடுக்க தேவையான தடுப்பு நடவடிக்கைகளை எடுப்பது மாநில / மாவட்ட நிர்வாகத்தின் அதிகார வரம்பிற்கு உட்பட்டது.
சட்ட விரோதமாக நிலக்கரி வெட்டி எடுப்பதால் ஏற்பட்ட நஷ்டத்தை துல்லியமாகக் குறிப்பிட முடியாது. இருப்பினும், பாதுகாப்புப் படையினர் நடத்திய சோதனைகள் மற்றும் சம்பந்தப்பட்ட மாநில அரசின் சட்டம் ஒழுங்கு அதிகாரிகளுடன் கூட்டு சோதனைகளின்படி, கடந்த மூன்று ஆண்டுகளில், பெருமளவு நிலக்கரி மீட்கப்பட்டுள்ளது.
சட்டவிரோதமாக நிலக்கரி வெட்டி எடுப்பதைத் தடுக்க, கைவிடப்பட்ட சுரங்கங்களின் திறப்புகளின் முகத்துவாரத்தில் கான்கிரீட் சுவர்கள் கட்டப்பட்டுள்ளன.
பாதுகாப்புப் படையினரும், சம்பந்தப்பட்ட மாநில அரசின் சட்டம் ஒழுங்கு அதிகாரிகளும் இணைந்து திடீர் சோதனைகளை நடத்தி வருகின்றனர்.
அதிக பள்ளம் உள்ள பகுதிகளில் குப்பை கொட்டும் பணி நடக்கிறது.
பாதிக்கப்படக்கூடிய இடங்களில் சோதனைச் சாவடிகள் அமைத்தல்.
சட்டவிரோத சுரங்கத்தின் பல்வேறு அம்சங்களைக் கண்காணிக்க சி.ஐ.எல் இன் சில துணை நிறுவனங்களில் வெவ்வேறு மட்டங்களில் (வட்டார மட்டம், உட்கோட்ட மட்டம், மாவட்ட மட்டம், மாநில அளவில்) குழு / பணிக்குழு அமைக்கப்பட்டுள்ளது.
அங்கீகரிக்கப்படாத நிலக்கரி சுரங்க நடவடிக்கைகளை சம்பந்தப்பட்ட சட்டம் ஒழுங்கு அதிகாரிகளை கண்காணித்து உரிய நடவடிக்கை எடுக்க உதவுவதற்காக "கானன் பிரஹரி" மற்றும் நிலக்கரி சுரங்க கண்காணிப்பு மற்றும் மேலாண்மை அமைப்பு (சி.எம்.எஸ்.எம்.எஸ்) என்ற வலை பயன்பாட்டை இந்திய அரசு அறிமுகப்படுத்தியுள்ளது.
பாதுகாப்புப் படையினர் நடத்திய சோதனைகள் மற்றும் சம்பந்தப்பட்ட மாநில அரசின் சட்டம் ஒழுங்கு அதிகாரிகளுடன் இணைந்து நடத்திய சோதனைகளின்படி, கடந்த மூன்று ஆண்டுகளில், பலர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இத்தகவலை மத்திய நிலக்கரி, சுரங்கம் மற்றும் நாடாளுமன்ற விவகாரத்துறை அமைச்சர் பிரகலாத் ஜோஷி மக்களவையில் எழுத்துப்பூர்வமாக அளித்த பதிலில் தெரிவித்துள்ளார்.
****
(Release ID: 1942818)
ANU/PKV/KRS
(Release ID: 1943028)
Visitor Counter : 158