குடியரசுத் தலைவர் செயலகம்
கட்டாக்கில் உள்ள எஸ்சிபி மருத்துவக் கல்லூரி மற்றும் மருத்துவமனையின் ஆண்டு விழாவில் குடியரசுத் தலைவர் பங்கேற்பு
प्रविष्टि तिथि:
26 JUL 2023 6:03PM by PIB Chennai
கட்டாக்கில் இன்று (ஜூலை 26, 2023) நடைபெற்ற எஸ்சிபி மருத்துவக் கல்லூரி மற்றும் மருத்துவமனையின் ஆண்டு விழாவில் குடியரசுத் தலைவர் திருமதி திரௌபதி முர்மு கலந்து கொண்டு உரையாற்றினார் .
மருத்துவத் தொழில் என்பது சேவையின் உறுதிமொழியாகும். சேவை மனப்பான்மையும், சமூகத்திற்கான அர்ப்பணிப்பும் இல்லாவிட்டால் ஒருவர் நல்ல மருத்துவராக முடியாது.
எந்தவொரு சமூகத்திற்கும் சுகாதாரம் முக்கியமானது என்று குடியரசுத் தலைவர் கூறினார். மருத்துவ அறிவியலின் முன்னேற்றத்தால், விலைமதிப்பற்ற உயிர்களைக் காப்பாற்ற முடிந்தது என்று அவர் மேலும் கூறினார். மாணவர்கள் ஆராய்ச்சியில் கவனம் செலுத்த வேண்டும் என்று அவர் வலியுறுத்தினார். புதிய மருந்துகளை கண்டறிவது ஏற்கனவே உள்ள மருந்துகளை பரிந்துரைப்பதைப் போலவே முக்கியமானது என்று அவர் கூறினார். இந்த ஆராய்ச்சி உலகில் இந்திய மருத்துவ விஞ்ஞானிகளுக்கு ஒரு புதிய அடையாளத்தை வழங்கும் என்று அவர் கூறினார்.
ஒரு சிறிய மருத்துவமனையாக தொடங்கி, எஸ்.சி.பி மருத்துவக் கல்லூரி மற்றும் மருத்துவமனை ஒடிசாவிலிருந்து மட்டுமல்லாமல் பிற கிழக்கு மாநிலங்களிலிருந்தும் மக்கள் சிகிச்சைக்காக வரும் முன்னணி நிறுவனங்களில் ஒன்றாக மாறியது குறித்து குடியரசுத் தலைவர் மகிழ்ச்சி தெரிவித்தார். இந்த நிறுவனத்தின் முன்னாள் மாணவர்கள் அந்தந்த துறைகளில் சிறந்து விளங்குவதாகவும், இந்தியாவில் மட்டுமல்லாமல் உலகின் பல்வேறு பகுதிகளிலும் சுகாதார சேவைகளை வழங்கி நாட்டிற்கு பெருமை சேர்ப்பதாகவும் அவர் குறிப்பிட்டார். இந்த நிறுவனத்தின் மாணவர்கள் தொடர்ந்து மனிதநேயத்திற்கு சேவை செய்து நாட்டிற்கு பெருமை சேர்ப்பார்கள் என்று அவர் நம்பிக்கை தெரிவித்தார்.
***
(रिलीज़ आईडी: 1943017)
आगंतुक पटल : 167