சமூக நிதி மற்றும் அதிகாரமளித்தல் அமைச்சகம்
azadi ka amrit mahotsav

பெற்றோர் மற்றும் மூத்த குடிமக்களின் பராமரிப்பு மற்றும் நலன் (திருத்த) மசோதா, 2019

Posted On: 25 JUL 2023 5:13PM by PIB Chennai

பெற்றோர் மற்றும் மூத்த குடிமக்களின் பராமரிப்பு மற்றும் நலன் தொடர்பான திருத்தச் சட்ட மசோதா 11-12-2019 அன்று மக்களவையில் அறிமுகப்படுத்தப்பட்டது. மக்களவை நிலைக்குழு தனது பரிந்துரைகளை 01-02-2021 அன்று சமூக நீதித் துறைக்கு அனுப்பியது. சட்டத் துறையுடன் கலந்தாலோசித்து பரிந்துரைகள் உரிய முறையில் இணைக்கப்பட்டுள்ளன.

சமூக நீதி மற்றும் அதிகாரமளித்தல் அமைச்சகம், மாநில அரசுகளுடன் கலந்தாலோசித்து, மூத்த குடிமக்களின் வாழ்க்கைத் தரத்தை மேம்படுத்துவதற்காக இலவச தகவல், வழிகாட்டுதல், ஆதரவு மற்றும் கள செயல்பாடுகளை வழங்கும் நோக்கத்துடன் மூத்த குடிமக்களுக்கான தேசிய ஹெல்ப்லைன் - கட்டணமில்லா எண் 14567 என்ற திட்டத்தை செயல்படுத்தி வருகிறது. தற்போது, 31 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் இந்த ஹெல்ப்லைன் உதவி எண் செயல்பட்டு வருகிறது.

இத்தகவலை மத்திய சமூக நீதி மற்றும் அதிகாரமளித்தல் துறை இணையமைச்சர் பிரதிமா பவுமிக் மக்களவையில் எழுத்துப்பூர்வமாக அளித்த பதிலில் தெரிவித்துள்ளார்.

 

***

ANU/PLM/KPG


(Release ID: 1942587) Visitor Counter : 153
Read this release in: English , Urdu , Telugu