கப்பல் போக்குவரத்து அமைச்சகம்
சாகர்மாலா திட்டத்தின் கீழ் ஆந்திர மாநிலத்தில் மேற்கொள்ளப்படும் திட்டப் பணிகள்
प्रविष्टि तिथि:
25 JUL 2023 3:15PM by PIB Chennai
சாகர்மாலா திட்டத்தின் ஒரு பகுதியாக, ஆந்திராவில் சுமார் 1.2 லட்சம் கோடி ரூபாய் மதிப்பீட்டில் 113 திட்டங்கள் செயல்படுத்த அடையாளம் காணப்பட்டுள்ளன. தற்போதுள்ள துறைமுகங்கள் மற்றும் முனையங்களை நவீனப்படுத்துதல், சுற்றுலா படகுத் துறை தொடர்பான பணிகள், துறைமுக இணைப்பை மேம்படுத்துதல், உள்நாட்டு நீர்வழித் தடங்கள், துறைமுகத்தைச் சுற்றி தொழில்மயமாக்கல் வடவடிக்கைகள், திறன் மேம்பாடு, தொழில்நுட்ப மையங்கள் போன்ற பல்வேறு திட்டங்கள் இதில் அடங்கும். இத்திட்டங்கள் மத்திய அரசின் பல்வேறு அமைச்சகங்கள், மாநில அரசின் கடல்சார் வாரியங்கள், மற்றும் தனியார் துறை மூலமாக செயல்படுத்துகின்றன.
ஆந்திர மாநிலத்தில் மொத்த திட்டங்களில் ரூ. 32,000 கோடி மதிப்பிலான 36 திட்டங்கள் முடிக்கப்பட்டுள்ளன. ரூ.91,000 கோடி மதிப்பிலான 77 திட்டங்கள் செயலாக்கத்தில் பல்வேறு நிலைகளில் உள்ளன.
இத்தகவலை மத்திய துறைமுகங்கள் மற்றும் கப்பல் துறை அமைச்சர் திரு சர்பானந்தா சோனோவால் மாநிலங்களவையில் எழுத்துப்பூர்வமாக அளித்த பதிலில் தெரிவித்துள்ளார்.
***
ANU/PLM/KPG
(रिलीज़ आईडी: 1942499)
आगंतुक पटल : 161