வடகிழக்குப் பகுதி வளர்ச்சி அமைச்சகம்
பிஎம்-டெவின் திட்டம்
Posted On:
24 JUL 2023 3:39PM by PIB Chennai
வடகிழக்கு பிராந்தியத்திற்கான பிரதமரின் மேம்பாட்டு முன்முயற்சி (பிஎம்- டெவின்) 2022-23 ஆம் ஆண்டிற்கான மத்திய பட்ஜெட்டில், ஏழு திட்டங்களின் ஆரம்ப பட்டியல் மற்றும் ரூ .1500 கோடி ஆரம்ப ஒதுக்கீட்டுடன் 100% மத்திய நிதியுடன் ஒரு புதிய மத்திய துறை திட்டமாக அறிவிக்கப்பட்டது. 2022, அக்டோபர் 12 அன்று பிஎம்-டெவின் திட்டத்திற்கு அமைச்சரவை ஒப்புதல் அளித்தது. 2022-23 முதல் 2025-26 வரையிலான 4 ஆண்டு காலத்திற்கு (15வதுநிதிக்குழு காலத்தின் மீதமுள்ள ஆண்டுகள்) இந்த திட்டத்திற்கு ரூ.6, 600 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
பிஎம்-டெவின் திட்டத்தின் குறிக்கோள்கள் பின்வருமாறு: (1) பிரதமர் விரைவு சக்தியின் உள்கட்டமைப்பிற்கு நிதியளித்தல்; (ii) வடகிழக்குப் பிராந்திய தேவைகளின் அடிப்படையில் சமூக மேம்பாட்டுத் திட்டங்களுக்கு ஆதரவளித்தல்; (iii) இளைஞர்கள் மற்றும் பெண்களுக்கு வாழ்வாதார நடவடிக்கைகளை மேற்கொள்ள உதவுதல்; (iv) பல்வேறு துறைகளில் உள்ள வளர்ச்சி இடைவெளிகளை நிரப்புதல்.
இத்திட்டத்தின் நோக்கங்களைக் கருத்தில் கொண்டு, 2022-23 ஆம் நிதியாண்டில் அறிவிக்கப்பட்ட ஏழு திட்டங்கள் உட்பட ரூ.1503.44 கோடி மதிப்பிலான 11 திட்டங்கள் 2022-23 நிதியாண்டில் ஒப்புதலுக்காகத் தேர்வு செய்யப்பட்டு, ரூ.121.10 கோடி வழங்கப்பட்டுள்ளது. 2023-24-ம் ஆண்டுக்குள் பிஎம்-டெவின் திட்டங்களுக்கு ஒப்புதல் அளிக்கவும், 2025-26-ம் ஆண்டில் முடிக்கவும் காலக்கெடு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
இத்தகவலை மத்திய வடகிழக்கு பிராந்திய மேம்பாட்டுத் துறை அமைச்சர் திரு ஜி. கிஷன் ரெட்டி மக்களவையில் எழுத்துபூர்வமாக அளித்த பதிலில் தெரிவித்துள்ளார்.
***
ANU/SMB/KPG
(Release ID: 1942204)
Visitor Counter : 147