விவசாயத்துறை அமைச்சகம்
காரீப் பயிர் விதைப்பு 733 லட்சம் ஹெக்டேர் பரப்பளவைத் தாண்டியது
Posted On:
24 JUL 2023 12:23PM by PIB Chennai
ஜூலை 21, 2023 நிலவரப்படி காரீப் பயிர்களின் பரப்பளவு முன்னேற்றத்தை வேளாண்மை மற்றும் விவசாயிகள் நலத் துறை வெளியிட்டுள்ளது.
இதன்படி காரீப் பருவப் பயிர்கள் மொத்தம் 733.42 லட்சம் ஹெக்டேர் பரப்பில் விதைக்கப்பட்டுள்ளன. சென்ற ஆண்டு இதே காலத்தில் மொத்தம் 724.99 லட்சம் ஹெக்டேர் பரப்பில் விதைக்கப்பட்டிருந்தன.
விதைக்கப்பட்டுள்ள முக்கிய பயிர்கள் பற்றிய விவரம் பின்வருமாறு:
அரிசி: இந்த ஆண்டு (2023) சுமார் 180.20 லட்சம் ஹெக்டேர் நிலப்பரப்பில் விதைக்கப்பட்டுள்ளது. சென்ற ஆண்டு (2022) இதே காலத்தில் விதைக்கப்பட்ட நிலப்பரப்பின் அளவு 175.47 லட்சம் ஹெக்டேர்.
பருப்பு வகைகள்: கடந்த ஆண்டு 95.22 லட்சம் ஹெக்டேர் நிலப்பரப்பில் விதைக்கப்பட்டிருந்த பருப்பு வகைகள், இந்த ஆண்டு 85.85 லட்சம் ஹெக்டேர் நிலப்பரப்பில் விதைக்கப்பட்டுள்ளன.
ஸ்ரீ அன்னா மற்றும் மோட்டா தானியங்கள்: சுமார் 134.91 லட்சம் ஹெக்டேர் பரப்பளவில் பயிரிடப்பட்டுள்ளன. சென்ற ஆண்டு இதே காலத்தில் 128.75 லட்சம் ஹெக்டேர் நிலப்பரப்பில் பயிரிடப்பட்டன.
எண்ணெய் வித்துக்கள்: நடைபாண்டில் 160.41 லட்சம் ஹெக்டேர் நிலப்பரப்பில் பயிரிடப்பட்டுள்ள எண்ணெய் வித்துக்கள், கடந்த ஆண்டு 155.29 லட்சம் ஹெக்டேர் நிலப்பரப்பில் பயிரிடப்பட்டிருந்தன.
கரும்பு: 2023-ஆம் ஆண்டில் 56.00 லட்சம் ஹெக்டேர் நிலப்பரப்பில் விதைக்கப்பட்டுள்ள கரும்பு, கடந்த 2022-ஆம் ஆண்டில் 53.34 லட்சம் ஹெக்டேர் நிலப்பரப்பில் விதைக்கப்பட்டன.
சணல் & மேஸ்தா: தற்போது 6.36 லட்சம் ஹெக்டேர் நிலப்பரப்பிலும், முந்தைய ஆண்டில் 6.92 லட்சம் ஹெக்டேர் நிலப்பரப்பிலும் பயிரிடப்பட்டுள்ளது.
பருத்தி: சுமார் 109.69 லட்சம் ஹெக்டேர் நிலப்பரப்பில் பயிரிடப்பட்டுள்ளது. சென்ற ஆண்டு இதே காலத்தில் 109.99 லட்சம் ஹெக்டேர் நிலப்பரப்பில் பயிரிடப்பட்டது.
மேலும் விவரங்களுக்கு இந்த செய்திக் குறிப்பை ஆங்கிலத்தில் இங்கே காணலாம்: https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1942000
***
AP/BR/AG
(Release ID: 1942062)
Visitor Counter : 151