பாதுகாப்பு அமைச்சகம்
azadi ka amrit mahotsav

கடற்படைத் தளபதி அட்மிரல் ஆர்.ஹரி குமார் வியட்நாம் பயணம்

Posted On: 22 JUL 2023 10:33AM by PIB Chennai

வியட்நாமுக்கு உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டுள்ள கடற்படைத் தளபதி அட்மிரல் ஆர்.ஹரி குமார்,வியட்நாமின் கேம் ரானில் 22 ஜூலை 2023 அன்று திட்டமிடப்பட்டுள்ள இந்திய கடற்படை கப்பலான கிர்பானை வியட்நாம் மக்கள் கடற்படையிடம் (வி.பி.என்) ஒப்படைக்கும் விழாவுக்கு தலைமை தாங்குவார்.

 

ஒத்த எண்ணம் கொண்ட கூட்டாளி நாடுகளுக்கு அவர்களின்  திறனை மேம்படுத்துவதில் உதவுவதற்கான இந்தியாவின் உறுதிப்பாட்டை  இது பிரதிபலிக்கிறது, மேலும் இது இந்திய அரசாங்கத்தின் 'கிழக்கில் செயல்படு' மற்றும் 'பிராந்தியத்தில் அனைவருக்கும் பாதுகாப்பு மற்றும் வளர்ச்சி (சாகர்) ஆகியவற்றின் கொள்கைகளுக்கு இணக்கமாக உள்ளது.

வியட்நாமுக்கு 2023 ஜூன் 19 அன்று சேவையில் உள்ள ஏவுகணையை பரிசளிப்பதாக பாதுகாப்பு துறை அமைச்சர் அறிவித்ததன் படி உள்நாட்டில் தயாரிக்கப்பட்ட ஐ.என்.எஸ் கிர்பான் வி.பி.என் நிறுவனத்திடம் ஒப்படைக்கப்படுகிறது. இதை நிறைவேற்றும் வகையில், ஐ.என்.எஸ் கிர்பன்  ஜூன் 28 அன்று இந்தியாவில் இருந்து வியட்நாமுக்கு இந்திய மூவர்ணக் கொடியின் கீழ் தனது இறுதிப் பயணத்தில் புறப்பட்டு 08 ஜூலை 2023 அன்று வியட்நாமின் கேம் ரான் நகரை அடைந்தது.

 

அட்மிரல் ஆர் ஹரி குமார் ஹாய் பாங்கில் உள்ள வியட்நாம் மக்கள் கடற்படையின் தலைமையகத்திற்குச் சென்று வியட்நாம் மக்கள் கடற்படையின் சி.ஐ.என்.சி வைஸ் அட்மிரல் டிரான் தன் நிகிம் உடன் இருதரப்பு கலந்துரையாடலை மேற்கொள்கிறார், மேலும் வியட்நாமின் தேசிய பாதுகாப்பு அமைச்சரையும் சந்திப்பார்.

 

சி.என்.எஸ்ஸின் வருகைஐ.என்மற்றும் வி.பி.என் இடையே இருதரப்பு பாதுகாப்பு ஈடுபாடுகளின் உயர் மட்டத்தையும், பிராந்தியத்தில் 'ஆசியான் மையத்தை' இந்தியா அங்கீகரிப்பதையும் குறிக்கிறது.

***

AD/PKV/DL


(Release ID: 1941732) Visitor Counter : 149