பாதுகாப்பு அமைச்சகம்
azadi ka amrit mahotsav

முன்னாள் படைவீரர்களுக்கான இரண்டாவது எதிர்கால வாய்ப்புகள்

प्रविष्टि तिथि: 21 JUL 2023 2:57PM by PIB Chennai

முன்னாள் படைவீரர்களுக்கு இரண்டாவது எதிர்காலத் தொழில் வாய்ப்புகளை வழங்கவும், பிற தொழில் முறை வல்லுநர்களுடன் அவர்களை தடையின்றி ஒருங்கிணைக்கவும் ஐபிஎம் நிறுவனத்துடன் மறுதீர்வு இயக்குநரகம் (Directorate General Resettlement - டிஜிஆர்) ஒரு புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டுள்ளது. இந்த புரிந்துணர்வு ஒப்பந்தம் 27 ஜூன் 2023 அன்று கையெழுத்தானது.

இந்தப் புரிந்துணர்வு ஒப்பந்தத்தின் முக்கிய அம்சங்கள்:

•    இதில் ஐபிஎம் அல்லது அதன் துணை நிறுவனங்களில், பணியாற்ற சம்பந்தப்பட்ட தகுதி வாய்ந்த ராணுவப் பின்னணியைச் சேர்ந்த முன்னாள் படைவீரர்கள், அவர்கள் விரும்பினால்  இணையலாம்.

•    இந்த புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்திடப்பட்ட தேதியிலிருந்து நடைமுறைக்கு வந்துள்ளது.  இருப்பினும், 30 (முப்பது) நாட்களுக்கு குறையாத எழுத்துப்பூர்வ அறிவிப்பின் மூலம் இரு தரப்பினராலும் இது நிறுத்தப்படலாம்.

•    இதற்கான வழிமுறைகள் டிஜிஆர் மற்றும் ஐபிஎம் இடையே கூட்டாக உருவாக்கப்படும்.

டி.ஜி.ஆர் எனப்படும் மறுதீர்வு இயக்குநரகம், நிறுவனங்கள் மற்றும் தொழில் அமைப்புகளுடன் இணைந்து செயல்படுகிறது. இது முன்னாள் படைவீரர்களுக்கு அவர்களின் திறன்களுக்கு ஏற்ப வேலைவாய்ப்பைப் பெற்றுத் தர உதவுகிறது.

 

இத்தகவலை பாதுகாப்புத்துறை இணை அமைச்சர் திரு அஜய் பட் இன்று மக்களவையில் எழுத்துப்பூர்வமாக அளித்த பதிலில் தெரிவித்துள்ளார்.

---

(Release ID: 1941370)

ANU/PLM/KRS


(रिलीज़ आईडी: 1941604) आगंतुक पटल : 149
इस विज्ञप्ति को इन भाषाओं में पढ़ें: English , Urdu