பாதுகாப்பு அமைச்சகம்

தேசிய பாதுகாப்பு அகாடமியில் பெண்கள் நியமனம்

Posted On: 21 JUL 2023 2:53PM by PIB Chennai

தேசிய பாதுகாப்பு அகாடமியில் பெண்களைச் சேர்ப்பது 2022 ஆம் ஆண்டு முதல் தொடங்கியது.

ஆண்டு வாரியான ஆட்சேர்ப்பு பின்வருமாறு:

நுழைதல் ஆண்டு        இடங்கள் சேர்ந்தது

என்.டி.ஏ-148     ஜூலை 2022             19                  19

என்.டி.ஏ- 149    ஜனவரி 2023            19                19

என்.டி.ஏ-150     ஜூலை 2023           19                19

தேசிய பாதுகாப்பு அகாடமியில் 57 பெண் கேடட்கள் சேர்க்கப்பட்டுள்ளனர். மாநில, யூனியன் பிரதேச வாரியான விவரங்கள் பின்வருமாறு:

i     அசாம்      - 1

ii    பீகார் -1

iii    சத்தீஸ்கர் 1

iv    டெல்லி   3

v    குஜராத்   1

vi    ஹரியானா     19

vii    இமாச்சலப் பிரதேசம் 2

viii   ஜம்மு காஷ்மீர் 2

ix    கர்நாடகா  1

x    கேரளா    4 (1 ராஜினாமா)

xi    மத்தியப் பிரதேசம்   1

xii    மகாராஷ்டிரா   3

xiii   பஞ்சாப்   3

xiv   ராஜஸ்தான்    3

xv    உத்தரப் பிரதேசம்    12

     மொத்தம்  57

         

என்.டி.ஏ.வில் ஆண்களுக்கு இணையாக பெண்களுக்கு அதே வசதிகள் வழங்கப்படுகின்றன. கேடட்களுக்கு வழங்கப்படும் வசதிகள்:

• பொதுவான பயிற்சி.

• பொதுவான கல்விப் பாடத்திட்டம்.

• ஆடை மற்றும் உபகரணங்கள்:

- பாலினத்திற்கு ஏற்ப ஆடை.

- உபகரணங்கள், புத்தகங்கள் மற்றும் எழுதுபொருட்கள் போன்றவை ஆண்களுக்கு இணையாக வழங்கப்படுகின்றன.

இத்தகவலை பாதுகாப்புத்துறை இணை அமைச்சர் திரு அஜய் பட் மக்களவையில் இன்று எழுத்துப்பூர்வமாக அளித்த பதிலில் தெரிவித்துள்ளார்.

----

(Release ID: 1941369)

ANU/PLM/KRS



(Release ID: 1941603) Visitor Counter : 99


Read this release in: English , Urdu