இடுகை இடப்பட்ட நாள்:
21 JUL 2023 4:07PM by PIB Chennai
பிரதமரின் பயிர் காப்பீட்டுத் திட்டத்தின் கீழ் 2016-17 முதல் 2022-23 வரை காப்பீட்டு நிறுவனங்களால் வசூலிக்கப்பட்ட மொத்த பிரீமியம் மற்றும் காப்பீட்டு நிறுவனங்கள் செலுத்திய இழப்பீடுகளின் ஆண்டு வாரியான, நிறுவன வாரியான மற்றும் மாநில வாரியான விவரங்களை மத்திய அரசு அளித்துள்ளது.
ஏற்கத்தக்க இழப்பீடுகளை கணக்கிடுவதற்காக பயிர் மகசூல் / பயிர் இழப்பை மதிப்பிடுவது தொடர்பான அனைத்து முக்கிய பணிகளும் சம்பந்தப்பட்ட மாநில அரசு அல்லது மாநில அரசு அதிகாரிகள் மற்றும் சம்பந்தப்பட்ட காப்பீட்டு நிறுவனத்தால் மேற்கொள்ளப்படுகின்றன. இருப்பினும், திட்டத்தை செயல்படுத்தும் போது, காப்பீட்டு நிறுவனங்கள் மீது சில புகார்கள் கூறப்படுகின்றன. பெரும்பாலான முறைப்பாடுகளுக்கு உரிய முறையில் தீர்வு காணப்பட்டுள்ளது.
இத்திட்டம் மாநில அரசால் செயல்படுத்தப்படுவதால், காப்பீடு செய்யப்பட்ட விவசாயிகளின் கோரிக்கைகள் உள்ளிட்ட குறைகள்/ புகார்களைத் தீர்ப்பதற்காக, மாவட்ட அளவிலான குறை தீர்க்கும் குழு (டி.ஜி.ஆர்.சி), மாநில அளவிலான குறை தீர்க்கும் குழு (எஸ்.ஜி.ஆர்.சி) ஆகிய அடுக்குமுறை குறைதீர்ப்பு அமைப்பு, இத்திட்டத்தின் திருத்திய செயல்பாட்டு வழிகாட்டுதல்களில் குறிப்பிடப்பட்டுள்ளபடி இக்குழுக்களுக்கு விரிவான ஆணை வழங்கப்பட்டுள்ளது.
மாநிலங்களவையில் வேளாண் துறை அமைச்சர் திரு நரேந்திர சிங் தோமர் அளித்த எழுத்து மூலமான பதிலில் இதனைத் தெரிவித்துள்ளார்.
---
(Release ID: 1941399)
ANU/PKV/KRS