உணவுப் பதப்படுத்துதல் தொழிற்சாலைகள் அமைச்சகம்

கர்நாடகாவில் உள்ள உணவு பதப்படுத்தும் தொழிற்சாலைகள்

Posted On: 21 JUL 2023 3:26PM by PIB Chennai

கர்நாடகா உட்பட நாடு முழுவதும் உணவு பதப்படுத்துதல் துறையின் ஒட்டுமொத்த வளர்ச்சி மற்றும் மேம்பாட்டை உறுதி செய்வதற்காக, உணவு பதப்படுத்துதல் தொழில்துறை அமைச்சகம்  2016-17 முதல் பிரதமரின் கிசான் சம்படா யோஜனா என்ற மத்திய திட்டத்தை செயல்படுத்தி வருகிறது.

 

இதன் உட்கூறு திட்டங்களின் கீழ், 15-வது நிதிக்குழுவின் சுழற்சிக்கு ரூ.4600 கோடி மொத்த ஒதுக்கீட்டில் கடனுடன் இணைந்த மூலதன மானியத்தை மத்திய நிதி அமைச்சகம் வழங்குகிறது. 5 ஆண்டுகளுக்கு (2020-21 முதல் 2024-25 வரை) ரூ.10,000 கோடி ஒதுக்கீட்டில் உணவு பதப்படுத்தும் குறு நிறுவனங்களுக்கு பிஎம்எஃப்எம்இ மூலம் நிதி, தொழில்நுட்ப மற்றும் வணிக ஆதரவை இந்த அமைச்சகம் வழங்குகிறது, அதே நேரத்தில் உணவு பதப்படுத்துதல் துறையில் சாம்பியன் பிராண்டுகளை உருவாக்குவதன் மூலம் 6 ஆண்டுகளுக்கு (2021-22 முதல் 2026-27 வரை) ரூ.10,000 கோடி ஒதுக்கீட்டில் உணவு பதப்படுத்தும் குறு நிறுவனங்களுக்கு உணவு பதப்படுத்தும் திறனை விரிவுபடுத்துவதை பி.எல்.ஐ.எஸ்.எஃப்.பி.ஐ நோக்கமாகக் கொண்டுள்ளது.

 

2019-20 ஆம் ஆண்டிலிருந்து, பி.எம்.கே.எஸ்.ஒய்-ன் ஒரு பகுதி திட்டமான உணவு பதப்படுத்துதல் மற்றும் பாதுகாப்பு திறன்களை உருவாக்குதல் / விரிவுபடுத்துதல் (சி.இ.எஃப்.பி.பி.சி) கீழ் மொத்தம் 373 உணவு பதப்படுத்தும் தொழிற்சாலைகள் நிதிஉதவிக்கு ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளன. இவற்றில் 16 தொழிற்சாலைகள் கர்நாடகாவில் அமைந்துள்ளன.

2020-21 ஆம் ஆண்டிலிருந்து மொத்தம் 38466 உணவு பதப்படுத்தும் குறு நிறுவனங்கள் பி.எம்.எஃப்.எம்.இ-ன் கீழ் நிதிஉதவிக்கு ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளன, இவற்றில் உணவு பதப்படுத்தும் 2444 குறு நிறுவனங்கள் கர்நாடகாவில் அமைந்துள்ளன.

இத்தகவலை மத்திய சுற்றுச்சூழல், வனம் மற்றும் பருவநிலை மாற்றத் துறை இணையமைச்சர் பிரகலாத் சிங் படேல் மாநிலங்களவையில் எழுத்துப்பூர்வமாக அளித்த பதிலில் தெரிவித்தார்.

******


ANU/SMB/KPG



(Release ID: 1941496) Visitor Counter : 107


Read this release in: English , Urdu