புதிய மற்றும் புதுப்பிக்கத்தக்க எரிசக்தி அமைச்சகம்
8521 மெகாவாட் திறன் கொண்ட 11 சோலார் பூங்காக்கள் கட்டி முடிக்கப்பட்டுள்ளன, 7 சோலார் பூங்காக்கள் பகுதியளவில் கட்டி முடிக்கப்பட்டுள்ளன: மத்திய மின் துறை அமைச்சர் திரு. ஆர்.கே. சிங்
Posted On:
20 JUL 2023 6:35PM by PIB Chennai
சூரிய ஒளிப் பூங்காக்கள் மற்றும் அல்ட்ரா மெகா மின் திட்டங்களை மேம்படுத்தும் திட்டத்தை மத்திய அரசு செயல்படுத்தி வருகிறது.
இத்திட்டத்தின் கீழ், நாடு முழுவதும் 12 மாநிலங்களில் 37,990 மெகாவாட் திறன் கொண்ட 50 சோலார் பூங்காக்களுக்கு அரசு ஒப்புதல் அளித்துள்ளது. இந்த அனுமதியின் மூலம், 8521 மெகாவாட் திறன் கொண்ட 11 சூரிய ஒளிப் பூங்காக்களும், 3985 மெகாவாட் திறன் கொண்ட 7 சூரிய ஒளிப் பூங்காக்களும் கட்டி முடிக்கப்பட்டுள்ளன. இந்த பூங்காக்களில், 10,237 மெகாவாட் திறன் கொண்ட சோலார் திட்டங்கள் உருவாக்கப்பட்டுள்ளன
சோலார் பார்க் திட்டத்திற்கு தற்போது 2026மார்ச்31 வரை காலக்கெடு உள்ளது.
இத்தகவலை மத்திய புதிய புதுப்பிக்கத்தக்க எரிசக்தி மற்றும் மின்துறை அமைச்சர் ஆர்.கே.சிங் மக்களவையில் இன்று எழுத்துப்பூர்வமாக அளித்த பதிலில் தெரிவித்தார்.
-----
(Release ID: 1941144)
PKV/KRS
(Release ID: 1941255)
Visitor Counter : 147