குறு சிறு மற்றும் நடுத்தர தொழில் துறை அமைச்சகம்

பிரதமரின் வேலைவாய்ப்பு உறுதித் திட்டம்

Posted On: 20 JUL 2023 5:28PM by PIB Chennai

குறு, சிறு மற்றும் நடுத்தரத் தொழில்கள் அமைச்சகம், கதர் மற்றும் கிராமத் தொழில்கள் ஆணையம்  மூலம், அசாம், தமிழ்நாடு மற்றும் ராஜஸ்தான் மாநிலம் உட்பட நாடு முழுவதும் பிரதமரின் வேலைவாய்ப்பு உருவாக்கும் திட்டத்தை செயல்படுத்தி வருகிறது. பாரம்பரிய கைவினைஞர்கள், கிராமப்புற மற்றும் நகர்ப்புற வேலைவாய்ப்பற்ற இளைஞர்களுக்கு அவர்களுடைய இல்லங்களிலேயே வேலை வாய்ப்புகளை வழங்குவதை நோக்கமாகக் கொண்டுள்ளது.

 

பிரதமரின் மேம்பாட்டுத் திட்டத்தின் கீழ், பொதுப் பிரிவு பயனாளிகள் திட்ட மதிப்பீட்டில் 25 சதவீதமும், நகர்ப்புறங்களில் 15 சதவீதமும் விளிம்புத் தொகை மானியத்தைப் பெறலாம். ஆதிதிராவிடர், பழங்குடியினர், இதர பிற்படுத்தப்பட்டோர், சிறுபான்மையினர், பெண்கள், முன்னாள் படைவீரர்கள், உடல் ஊனமுற்றோர், திருநங்கைகள், வடகிழக்கு பிராந்திய, மலை மற்றும் எல்லைப் பகுதிகளைச் சேர்ந்த பயனாளிகள் மற்றும் முன்னோடி மாவட்டங்களைச் சேர்ந்த பயனாளிகளுக்கு விளிம்புத் தொகை மானியம் கிராமப்புறங்களில் 35% மற்றும் நகர்ப்புறங்களில் 25% ஆகும். இதுதவிர, பொதுப் பிரிவைச் சேர்ந்த பயனாளிகள் திட்ட மதிப்பீட்டில் 10 சதவீதமும், சிறப்புப் பிரிவினர் 5 சதவீதமும் திட்ட மதிப்பீட்டில் பங்களிக்கின்றனர். உற்பத்தித் துறையில் அதிகபட்சமாக ரூ.50 லட்சமும், சேவைத் துறையில் ரூ.20 லட்சமும் செலவாகும்.

2018-19 ஆம் ஆண்டு முதல், சிறப்பாகச் செயல்படும் பி.எம்..ஜி.பி / ஆர்..ஜி.பி / முத்ரா அலகுகளை மேம்படுத்துவதற்கும் விரிவுபடுத்துவதற்கும் ரூ.1 கோடி வரை 15% மானியத்துடன் (என்..ஆர் மற்றும் மலைப்பகுதிகளுக்கு 20%) 2வதுநிதி உதவி அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.

பி.எம்..ஜி.பி.யின் கீழ், மொத்த அலகுகளில் சுமார் 80% கிராமப்புறங்களில் உள்ளன, அதே நேரத்தில் 14% மொத்த அலகுகள் முன்னோடி மாவட்டங்களில் உள்ளன. மேலும், மொத்த தொழிற்சாலைகளில் கிட்டத்தட்ட 50% பெண்கள் மற்றும் எஸ்.சி / எஸ்.டி தொழில்முனைவோருக்குச் சொந்தமானவை.

 

கிராமப்புறங்கள் மற்றும் அசாம், தமிழ்நாடு மற்றும் ராஜஸ்தான் மாநிலங்கள் உட்பட நாட்டில் கடந்த மூன்று ஆண்டுகளில் பி.எம்..ஜி.பி.யின் கீழ் நிர்ணயிக்கப்பட்ட இலக்குகள் மற்றும் சாதனைகள் பற்றிய விவரங்கள் பின்னிணைப்பில் கொடுக்கப்பட்டுள்ளன.

 

அசாம், தமிழ்நாடு மற்றும் ராஜஸ்தான் மாநிலத்தின் ஊரகப் பகுதிகளில் கடந்த 3 ஆண்டுகளில் பிரதமர் ஊரக வளர்ச்சித் திட்டத்தின் கீழ் உருவாக்கப்பட்ட வேலைவாய்ப்புகளின் எண்ணிக்கை பின்வருமாறு:

ஆண்டு

மதிப்பிடப்பட்ட வேலைவாய்ப்பு உருவாக்கம்

அசாம்

தமிழ்நாடு

ராஜஸ்தான்

2020-21

19744

35040

16336

2021-22

26208

39336

15256

2022-23

17320

39032

13008

பி.எம்..ஜி.பி.யின் கீழ், பெண் தொழில்முனைவோருக்கு குறிப்பிட்ட இலக்கு எதுவும் நிர்ணயிக்கப்படவில்லை. இருப்பினும், இத்திட்டத்தின் கீழ் பெண்கள் சிறப்புப் பிரிவுகளின் கீழ் கருதப்படுகிறார்கள், மேலும் அவர்கள் அதிக விளிம்புத் தொகை மானியம் மற்றும் குறைந்த தனிப்பட்ட பங்களிப்புக்கு தகுதியுடையவர்கள். கடந்த 3 ஆண்டுகளில் பிரதம மந்திரி .ஜி.பி.யின் கீழ் உதவிய மகளிர் தலைமையிலான பிரிவுகளின் விவரங்கள் பின்வருமாறு:

ஆண்டு

மகளிர் தலைமையிலான பிரிவுகள் உதவி

2020-21

27285

2021-22

39156

2022-23

32626

இத்தகவலை மத்திய சிறு மற்றும் நடுத்தரத் தொழில் துறை இணையமைச்சர் பானு பிரதாப் சிங் வர்மா மக்களவையில் எழுத்துப்பூர்வமாக அளித்த பதிலில் தெரிவித்துள்ளார்.

*****



(Release ID:1941066)



(Release ID: 1941245) Visitor Counter : 183


Read this release in: English , Urdu , Punjabi