அறிவியல் மற்றும் தொழில்நுட்பத்துறை
தேசிய உயிரி மருந்து இயக்கம் 150-க்கும் மேற்பட்ட நிறுவனங்கள் மற்றும் 30 குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள் உட்பட 101 திட்டங்களை ஆதரிப்பதாக டாக்டர் ஜிதேந்திர சிங் கூறுகிறார்
Posted On:
20 JUL 2023 4:01PM by PIB Chennai
உயிரி மருந்துத் துறையில் 101 பான்-இந்தியா திட்டங்களுக்கு தேசிய உயிரி மருந்து இயக்கம் ஆதரவளித்து வருவதாகவும், இது அதிக வேலை வாய்ப்புகளை ஏற்படுத்தியுள்ளதாகவும் மத்திய அறிவியல் மற்றும் தொழில்நுட்பத் துறை இணையமைச்சர் (தனிப்பொறுப்பு) பிரதமர் அலுவலக பணியாளர், பொதுமக்கள் குறைகள், ஓய்வூதியம், அணுசக்தி மற்றும் விண்வெளித் துறை இணை அமைச்சர் டாக்டர் ஜிதேந்திர சிங் கூறினார். இந்தத் திட்டங்களில் 304 விஞ்ஞானிகள் / ஆராய்ச்சியாளர்கள் உட்பட 1,065 பணியாளர்கள் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். தயாரிப்பு மேம்பாட்டை வலுப்படுத்துவதற்கான முக்கியமான திறன் இடைவெளியை நிவர்த்தி செய்வதற்கான குறிப்பிட்ட பயிற்சிகளை வழங்குவதன் மூலம் மனித மூலதனத்தின் வளர்ச்சிக்கு இந்த இயக்கம் ஆதரவளிக்கிறது.
இது குறித்து மாநிலங்களவையில் எழுத்துப்பூர்வமாக பதில் அளித்த டாக்டர் ஜிதேந்திர சிங், கல்வியாளர்கள், புத்தொழில் நிறவனங்கள் மற்றும் குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள் உள்ளிட்ட 150-க்கும் மேற்பட்ட நிறுவனங்களுக்கு தேசிய உயிரி மருந்து இயக்கம் ஆதரவு அளித்து வருகிறது. 30 குறு, சிறு, மற்றும் நடுத்தரத் தொழில் நிறுவனங்களுக்கு மலிவு விலை தயாரிப்பு மேம்பாட்டிற்கு உதவும் வகையில் திட்டங்கள் ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளன. இந்த இயக்கத்தின் கீழ் அளிக்கப்படும் பகிரப்பட்ட வசதிகள், மருத்துவ பரிசோதனை கட்டமைப்புகள் மற்றும் தொழில்நுட்ப பரிமாற்ற அலுவலகங்களிலிருந்தும் குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள் பயனடைந்துள்ளன. தேசிய உயிரி மருந்தின் கீழ் தயாரிப்பு மேம்பாடு, உயிரியல் மற்றும் ஒழுங்குமுறை அம்சங்கள் குறித்த பல்வேறு பயிற்சிகள் நடத்தப்பட்டுள்ளன, இதில் குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்களின் பிரதிநிதிகள் பங்கேற்றுள்ளனர்.
தேசிய உயிரி மருந்து இயக்கம் என்பது (என்.பி.எம்) என்பது உயிரி மருந்தியல்களுக்கான கண்டுபிடிப்பு ஆராய்ச்சியை விரைவுபடுத்துவதற்கான தொழில்துறை - கல்வி கூட்டு இயக்கம் - "இந்தியாவில் புதுமை உயிரித் தொழில்நுட்ப தொழில் முனைவோருக்கு அதிகாரமளித்தல் மற்றும் உள்ளடக்கிய கண்டுபிடிப்புகளை விரைவுபடுத்துதல்"; உயிரித் தொழில் நுட்பத் துறையின் (டிபிடி) உயிரித் தொழில்நுட்ப தொழில் ஆராய்ச்சி உதவி கவுன்சில் (பி.ஐ.ஆர்.ஏ.சி) மூலம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. உயிரி மருந்துகள் (தடுப்பூசிகள், பயோசிமிலர்கள்), மருத்துவ சாதனங்கள் மற்றும் நோய் கண்டறிதல் ஆகியவற்றில் தொழில்நுட்ப மற்றும் தயாரிப்பு மேம்பாட்டு திறன்கள். தடுப்பூசிகள் மற்றும் உயிரி மருந்துத் துறையில் புத்தொழில்கள், குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்களுக்கு பரிசோதனை, சரிபார்த்தல் மற்றும் உற்பத்தி சேவைகளை வழங்குவதற்காக 11 பகிரப்பட்ட வசதிகளை நிறுவுவதன் மூலம், உயிரி மருந்துத் துறைக்கான உள்கட்டமைப்பை வலுப்படுத்த இந்த இயக்கம் ஆதரவளித்துள்ளது. செயல்பாட்டு வசதிகளில் தடுப்பூசி குணப்படுத்தலுக்கான ஜி.சி.எல்.பி ஆய்வகங்கள், பயோசிமிலர்களின் பகுப்பாய்வு சோதனைக்கான ஜி.எல்.பி ஆய்வகங்கள், சி.ஜி.எம்.பி உற்பத்தி மற்றும் செயல்முறை மேம்பாட்டு ஆய்வகங்கள் ஆகியவை அடங்கும்.
1. நிர்வகிக்கப்படும் கூட்டாண்மைகளில் கவனம் செலுத்துவதன் மூலம் பொது சுகாதாரத் தேவைக்குரிய தடுப்பூசிகள், பயோசிமிலர்கள், மருத்துவ சாதனங்கள் மற்றும் நோய் கண்டறிதல்களுக்கான தயாரிப்பு வழிகளை உருவாக்குதல். காலரா, இன்ஃப்ளூயன்ஸா, டெங்கு, சிக்குன்குனியா, நிமோகோகல் நோய், கொவிட்-19 மற்றும் தொடர்புடைய தொழில்நுட்பங்களுக்கான பல்வேறு தடுப்பூசிகளை உருவாக்குவதற்கு இந்த இயக்கம் ஆதரவளித்து வருகிறது. நீரிழிவு, வாத மற்றும் கண் நோய்கள், புற்றுநோய்க்கான பயோசிமிலர் தயாரிப்புகள் மற்றும் தொடர்புடைய தொழில்நுட்பங்கள், டயாலிசிஸுக்கான குழாய்கள், எண்டோஸ்கோப்கள், எலும்பு உள்வைப்புகள், எம்ஆர்ஐ ஸ்கேனர்கள் மற்றும் கொவிட்-19 க்கான நோய் கண்டறிதல்கள் உள்ளிட்ட மருத்துவ சாதனங்கள் மற்றும் நோய் கண்டறிதல்கள்.
2. தயாரிப்புமேம்பாடு மற்றும் சரிபார்ப்புக்கான பகிரப்பட்ட வசதிகளை நிறுவுதல் மற்றும் வலுப்படுத்துதல். உயிரி மருந்து தடுப்பூசிகள், பயோசிமிலர்கள்) மற்றும் மருத்துவ தொழில் நுட்ப சாதன மேம்பாடு ஆகிய இரண்டிற்கும் பகிரப்பட்ட உள்கட்டமைப்பு வசதிகளை நிறுவுவதற்கான ஆதரவு இந்த இயக்கத்தால் வழங்கப்படுகிறது. தடுப்பூசிகள் மற்றும் உயிர் சிகிச்சைகளின் பரிசோதனைகளுக்காக மருத்துவமனை அடிப்படையிலான மற்றும் கள தள அடிப்படையிலான மருத்துவ சோதனை கட்டமைப்புகளை நிறுவுவதும் ஆதரிக்கப்படுகிறது.
3. முக்கியமான திறன் இடைவெளியை நிவர்த்தி செய்ய குறிப்பிட்ட பயிற்சிகளை வழங்குவதன் மூலம் மனித மூலதனத்தின் வளர்ச்சிக்கு ஆதரவளித்தல். திறன் மேம்பாட்டுத் திட்டத்தின் கீழ், உயிரி சிகிச்சை, சுற்றுச்சூழல் சுகாதாரம் மற்றும் பாதுகாப்பு ஆகிய துறைகளில் 46 பயிற்சி தொகுதிகள் நடத்தப்பட்டுள்ளன, மொத்தம் சுமார் 7000 பணியாளர்கள் இந்த பயிற்சிகளில் கலந்து கொண்டனர்.
4.தொழில்நுட்ப பரிமாற்ற அலுவலகங்களை நிறுவுதல். கல்வியாளர்கள், கண்டுபிடிப்பாளர்கள் மற்றும் தொழில் முனைவோருக்கு அதிக வாய்ப்புகளை வழங்கவும், தயாரிப்புகள் மற்றும் தொழில்நுட்பங்களைப் பகிரவும், 7 தொழில்நுட்பபரிமாற்ற அலுவலகங்கள் ஆதரிக்கப்படுகின்றன.
-----
(Release ID: 1941006)
LK/IR/KPG/RJ
(Release ID: 1941185)
Visitor Counter : 132