அறிவியல் மற்றும் தொழில்நுட்பத்துறை
தொழில்நுட்பப் பரிமாற்றம் மூலம் பாரம்பரிய அறிவை வளர்ப்பது கால்நடை இனப்பெருக்கத்தில் நிலையான நடைமுறைகளை ஒருங்கிணைக்க உதவும்
Posted On:
19 JUL 2023 3:51PM by PIB Chennai
சுற்றுச்சூழலுக்கு உகந்த இரண்டு தொழில்நுட்பங்களின் வளர்ச்சிக்கு தொழில்நுட்பப் பரிமாற்றம் உதவியுள்ளது. முதலாவது, பாலூட்டும் விலங்குகளில் பொதுவாகக் காணப்படும் மடி நோயைக் கட்டுப்படுத்தும் திறன் கொண்ட பாரம்பரிய மூலிகை உருவாக்கம். இரண்டாவது, பிராய்லர் கோழிகளின் வளர்ச்சிக்காக கொடுக்கப்படும் மூலிகைச் சேர்க்கை.
மத்திய அறிவியல் மற்றும் தொழில்நுட்பத் துறையின் தன்னாட்சி அமைப்பான தேசிய புதுமைக் கண்டுபிடிப்புகள் அமைப்பு, இந்தியன் ஜெனோமிக்ஸ் மருந்து நிறுவனத்துடன் இணைந்து பாரம்பரிய தொழில்நுட்பங்களை நவீன தொழில்நுட்பத்திற்கு மாற்றும் முயற்சியைத் தொடங்கியுள்ளது. இந்த முயற்சியானது தலைமுறை தலைமுறையாக சமுதாயத்தால் கடைபிடிக்கப்பட்டு வரும் சிறந்த பாரம்பரிய அறிவை வளர்ப்பதற்கான ஒரு படியாகும்.
பாலூட்டும் விலங்குகளில் மடி நோயைக் கட்டுப்படுத்துவதிலும், கோழித் தீவனத்தில் அளிக்கப்படும் சேர்க்கைகளும், பாரம்பரிய தொழில்நுட்பங்கள் அறிவியல் பூர்வமாக ஆய்வு செய்யப்பட்டு அவை நல்ல பயனளிப்பது கண்டறியப்பட்டுள்ளது.
தேசிய புதுமை கண்டுபிடிப்புகள் அமைப்பு பாரம்பரிய அறிவைப் பெற விவசாயிகளுடன் ஒருங்கிணைந்து செயல்படத் தொடங்கியது.
தேசிய புதுமை கண்டுபிடிப்புகள் அமைப்பு இந்த மூலிகை பயன்பாட்டுக்கு அறிவியல் சான்றுகளுடன் அதன் மதிப்பை அதிகரித்துள்ளதோடு, காப்புரிமை பாதுகாக்கப்படுவதற்கும் உதவியுள்ளது.
***
AD/CR/KRS
(Release ID: 1940812)
Visitor Counter : 145