நித்தி ஆயோக்

நிதி ஆயோக் டிசிஆர்எம் மேட்ரிக்ஸ் கட்டமைப்பை வெளியிட்டது

Posted On: 18 JUL 2023 6:43PM by PIB Chennai

இந்தியாவில் தொழில்நுட்ப மதிப்பீட்டில் புரட்சியை ஏற்படுத்தவும், புதுமையான கண்டுபிடிப்புகளை ஊக்குவிக்கவும், சுயதொழில் முனைவோரை உருவாக்கவும், நிதி ஆயோக் தொழில்நுட்ப-வணிகத் தயார்நிலை மற்றும் சந்தை முதிர்வு மேட்ரிக்ஸ் (டிசிஆர்எம்) கட்டமைப்பை வெளியிட்டது.

தொழில்நுட்ப-வணிகத் தயார்நிலை மற்றும் சந்தை முதிர்வு மேட்ரிக்ஸ் கட்டமைப்பின் அறிமுகமானது, இந்தியாவின் புதுமையான கண்டுபிடிப்புகள் மற்றும் சுயதொழில் தொழில்முனைவோருக்கு மைல்கல்லாக அமையுமென நிதி ஆயோக் உறுப்பினர் (அறிவியல் மற்றும் தொழில்நுட்பம்) டாக்டர் வி.கே.சரஸ்வத் தெரிவித்துள்ளார். வலுவான மதிப்பீட்டு முறையை அறிமுகப்படுத்துவதன் மூலம், நாடு முழுவதும் உள்ள பங்குதாரர்கள், தொழில்நுட்பத்தின் மூலம் தங்களது வணிகத்தை மேம்படுத்த முடியுமெனவும், இதன் மூலம் புதுமையான கண்டுபிடிப்புகளில் இந்தியாவை சர்வதேச அளவில் முன்னிலைப்படுத்த முடியுமெனவும் அவர் கூறினார்.

 

டிசிஆர்எம் மேட்ரிக்ஸ் கட்டமைப்பானது இந்தியாவின் கண்டுபிடிப்புகளை புதிய ஊக்குவிப்பதில் முக்கியப் பங்கு வகிப்பதோடு, புதிய யோசனைகளுக்கான சூழலை உருவாக்குகிறது. மத்திய அரசு நிதி ஆயோக் மூலம்,  புதுமையான கண்டுபிடிப்புகளை ஊக்குவிக்கவும், சுயதொழில் முனைவோரை ஊக்குவிப்பதிலும் உறுதியுடன் உள்ளது.

***

LK/CR/RJ



(Release ID: 1940797) Visitor Counter : 101


Read this release in: English , Urdu , Hindi , Marathi