புள்ளியியல் மற்றும் திட்ட அமலாக்கம் அமைச்சகம்
2023 மே மாதத்திற்கான தொழில் உற்பத்தி மற்றும் பயன்பாட்டு அடிப்படையிலான குறியீட்டின் விரைவு மதிப்பீடுகள் (அடிப்படை 2011-12=100)
Posted On:
12 JUL 2023 5:30PM by PIB Chennai
தொழில்துறை உற்பத்திக் குறியீட்டின் (ஐஐபி) விரைவு மதிப்பீடுகள் ஒவ்வொரு மாதமும் 12 ஆம் தேதி அல்லது 12 ஆம் தேதி விடுமுறையாக இருந்தால் முந்தைய வேலை நாளில் வெளியிடப்படும். அதாவது நடந்து முடிந்த மாதத்துக்கு முந்தைய மாதத்துக்கான இந்த மதிப்பீடுகள் ஆறு வார இடைவெளியில் வெளியிடப்படுகின்றன.
2023 மே மாதத்தில், 2011-12 ஆம் ஆண்டை அடிப்படையாகக் கொண்ட தொழில்துறை உற்பத்தி குறியீட்டின் (ஐஐபி) விரைவு மதிப்பீடு 145.0 ஆக உள்ளது. 2023 மே மாதத்திற்கான சுரங்கம், உற்பத்தி மற்றும் மின்சாரத் துறைகளுக்கான தொழில்துறை உற்பத்தி குறியீட்டு மதிப்பீடுகள் முறையே 128.1, 142.3 மற்றும் 201.6 ஆக உள்ளன. இந்த விரைவு மதிப்பீடுகள் ஐஐபி-யின் திருத்தக் கொள்கையின்படி அடுத்தடுத்த வெளியீடுகளில் மாற்றத்திற்கு உள்ளாகும் வாய்ப்பு உள்ளது.
பயன்பாட்டு அடிப்படையிலான வகைப்பாட்டின்படி, மே 2023 மாதத்திற்கான மதிப்பீடுகள் முதன்மை பொருட்களுக்கு 149.8 ஆகவும், மூலதன பொருட்களுக்கு 102.7 ஆகவும், இடைநிலை பொருட்களுக்கு 154.1 ஆகவும், உள்கட்டமைப்பு மற்றும் கட்டுமான பொருட்களுக்கு 174.7 ஆகவும் உள்ளன. மேலும், 2023 மே மாதத்தில் நுகர்வோர் சாதனங்கள் மற்றும் நுகர்வோர் அல்லாத பொருட்களுக்கான குறியீட்டு மதிப்பீடுகள் முறையே 115.2 மற்றும் 148.0 ஆக உள்ளன.
ஜூன் 2023-க்கான குறியீட்டு எண் 11 ஆகஸ்ட் 2023 வெள்ளிக்கிழமை அன்று வெளியாகும்.
இந்த மதிப்பீடுகள் தொடர்பான விவரம் மத்திய புள்ளியியல் மற்றும் திட்ட அமலாக்க அமைச்சகத்தின் http://www.mospi.gov.in என்ற இணாயதளத்திலும் உள்ளது.
****
SM/ PLM /KRS
(Release ID: 1939048)
Visitor Counter : 155