ஐஃஎப்எஸ்சி ஆணையம்
azadi ka amrit mahotsav

சர்வதேச நிதிச் சேவை மையங்கள் ஆணையம் மற்றும் பருவநிலைக் கொள்கை முன்முயற்சி ஆகியவற்றுக்கு இடையே புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்து

Posted On: 11 JUL 2023 5:45PM by PIB Chennai

சர்வதேச நிதிச் சேவை மையங்கள் ஆணையம் (ஐஎப்எஸ்சிஏ) மற்றும் பருவநிலைக் கொள்கை முன்முயற்சி - இந்தியா (சிபிஐ) ஆகியவை பரஸ்பர உதவி மற்றும் ஒத்துழைப்புக்கான புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டுள்ளன.

இந்தியாவின் ஜி20 தலைமைத்துவம் "ஒரு பூமி, ஒரு குடும்பம், ஒரு எதிர்காலம்" என்ற கருப்பொருளுடன் தொடங்குகிறது. நிலையான மேம்பாடு என்பது ஜி20 பணிக்குழுக்களின் முக்கிய முன்னுரிமையாகும். பசுமையான மற்றும் நெகிழ்வுத் தன்மையுடைய பொருளாதாரங்களுக்கு நிலையான நிதியைத் திரட்டுவது மிகவும் முக்கியமானது. சர்வதேச சிறந்த நடைமுறைகளை அடிப்படையாகக் கொண்டு, குறிப்பாக இந்தியா மற்றும் வளரும் நாடுகளின் தேவைகளை மையமாகக் கொண்டு, உலகளாவிய நிலையான முதலீடுகளைத் திரட்டுவதை விரைவுபடுத்த ஐஎப்எஸ்சிஏ குறிப்பிடத்தக்க நடவடிக்கைகளை எடுத்துள்ளது. நிதி மற்றும் கொள்கையில் ஆழ்ந்த நிபுணத்துவத்துடன், உலகெங்கிலும் உள்ள மிக முக்கியமான பயன்பாட்டு நடைமுறைகளை மேம்படுத்தும் ஒரு பகுப்பாய்வு மற்றும் ஆலோசனை அமைப்பாக சிபிஐ உள்ளது. இதன் நோக்கம், பருவநிலை மாற்றத்தை எதிர்கொள்ளும்போது அரசுகளின்  பொருளாதார வளர்ச்சிக்கு உதவுவதாகும். இந்தப் பின்னணியில்தான், ஐஎப்எஸ்சிஏ, சிபிஐ  ஆகியவை  நிதித் துறையில் நிலைத்தன்மையை உள்ளடக்கிய பரந்த அளவிலான புரிந்துணர்வு ஒப்பந்தத்தின் மூலம் ஒத்துழைக்கின்றன.

 

ஐஎஃப்எஸ்சிஏவின் நிர்வாக இயக்குநர் திரு பிரவீன் திரிவேதி, ஐஎஃப்எஸ்சிஏஇந்தியா மற்றும் பிற வளர்ந்து வரும் பொருளாதாரங்கள் தங்கள் நிகர பூஜ்ஜிய லட்சியங்களை பூர்த்தி செய்வதற்கும், நிலையான மேம்பாட்டு இலக்குகளை அடைவதற்கும் முக்கிய பங்கு வகிக்க விரும்புகிறது’’ என்றார்.

பருவநிலைக் கொள்கை முன்முயற்சியின் இந்திய இயக்குநர் டாக்டர் துருபா புர்காயஸ்தா, 2022 இல் சிபிஐ வெளியிட்ட பசுமை நிதியத்தின் நிலவரப்படி, கண்காணிக்கப்பட்ட மொத்த பருவநிலை முதலீடுகள் 2018 முதல் 2020 வரை ஆண்டுக்கு 40 முதல் 50 பில்லியன் டாலர் வரை இருக்கும். இதில் தோராயமாக 85% உள்நாட்டு ஆதாரங்கள் மூலம் கிடைத்தன. இந்தியாவின் பருவநிலை முதலீட்டுத் தேவையைப் பூர்த்தி செய்ய இது போதுமானதாக இல்லை. இந்தியாவில் வெற்றிகரமான குறைந்த கார்பன் மாற்றத்திற்கு அதிக சர்வதேச மூலதனம் தேவைப்படுகிறது. இந்தப்  புரிந்துணர்வு ஒப்பந்தம், இந்தியாவில் நிலையான நிதி திரட்டலை ஆதரிப்பதை நோக்கமாகக் கொண்டுள்ளது’’ என்று கூறினார்.

***

TV/ PKV /KRS

 


(Release ID: 1938788) Visitor Counter : 123


Read this release in: English , Urdu , Hindi , Telugu