பாதுகாப்பு அமைச்சகம்
azadi ka amrit mahotsav

சர்வதேச யோகா தினத்தையொட்டி இந்திய கப்பற்படை,பெருங்கடல் வளையம் நிகழ்ச்சியை நடத்துகிறது

Posted On: 20 JUN 2023 6:31PM by PIB Chennai

சர்வதேச யோகா தினத்தையொட்டி பாதுகாப்பு அமைச்சகத்துடன் ஒருங்கிணைந்து (ஒற்றுமை மற்றும் ஒருமைப்பாட்டின் அடையாளமாக) யோகாவின் பெருங்கடல் வளையம்’ நிகழ்ச்சிக்கு மத்திய ஆயுஷ் அமைச்சகம் திட்டமிட்டுள்ளது. இதையொட்டி இந்தியப் பெருங்கடல் பகுதியில் பணியமர்த்தப்பட்டுள்ள இந்திய கப்பற்படையின் கப்பல்கள் நட்பு நாடுகளின் பல்வேறு துறைமுகங்களுக்குப் பயணம் செய்து சர்வதேச யோகா தினத்தின் மையப்பொருளான ‘வசுதைவ குடும்பகம்’ என்ற செய்தியைப் பரவலாக்கும்.

பங்களாதேஷின் சட்டோகிராம், எகிப்தின் சஃபாகா, இந்தோனேஷியாவின் ஜகார்த்தா, கென்யாவின் மும்பாசா, மடகாஸ்கரின் டோமாசினா, ஓமனின் மஸ்கட், இலங்கையின் கொழும்பு, தாய்லாந்தின் புக்கெட் உள்ளிட்ட துறைமுகங்களுக்கு இந்திய கப்பற்படை கப்பல்களான ஐஎன்எஸ் கில்டான், சென்னை, ஷிவாலிக், சுனைனா, திரிசூல், தற்காஷ், வாகிர், சுமித்ரா, பிரம்மபுத்ரா ஆகியவை பயணம் செய்து யோகா தினத்தின் முக்கியத்துவத்தை உணர்த்தும்.  

யோகாவின் பெருங்கடல் வளையத்தில் 19 இந்திய கப்பற்படை கப்பல்களில் பயணம் செய்யும் சுமார் 3,500 கப்பற்படை வீரர்கள் பங்கேற்பதோடு யோகாவில் தூதர்களாக தேசிய மற்றும் சர்வதேச கடல்பகுதியில் கப்பற்படை கப்பல்கள் 35,000 கிலோ மீட்டர் பயணம் மேற்கொள்ளும்.   இந்த நிகழ்வில் வெளிநாடுகளைச் சேர்ந்த கப்பற்படை வீரர்கள் சுமார் 1,200 பேர் பங்கேற்பார்கள்.

***

SM/SMB/RJ/KRS


(Release ID: 1933760) Visitor Counter : 140