சிறப்பு சேவைகள் மற்றும் கட்டுரைகள்
3வது ஜி20 நீடித்த நிதிக்கான செயற்குழு(FWG) கூட்டத்தை முன்னிட்டு சென்னை ரிசர்வ் வங்கி பணியாளர் கல்லூரியில் ஜி 20 உள்நாட்டு மக்கள் தொடர்பு நிகழ்ச்சி நடைபெற்றது.
Posted On:
17 JUN 2023 7:54PM by PIB Chennai
ஒரு நிலையான எதிர்காலத்தை அடைவதற்கான 3வது ஜி20 நீடித்த நிதிக்கான செயற்குழு(SFWG) கூட்டத்தை முன்னிட்டு சென்னை ரிசர்வ் வங்கி பணியாளர் கல்லூரியில் உள்நாட்டு மக்கள் தொடர்பு நடைபெற்றது. மாமல்லபுரத்தில் 3வது ஜி 20 நிலையான நிதி செயற்குழு (SFWG) கூட்டத்திற்கு முன்னதாக சென்னை ரிசர்வ் வங்கி பணியாளர் கல்லூரியில் நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்யப்பட்டது. நிகழ்வில் நிதி அமைச்சகத்தின் ஆலோசகர் திருமதி கீது ஜோஷி வரவேற்புரை வழங்கினார்.
ஜி 20 இந்தியத்தலைமையின் கீழ், நீடித்த நிதிக்கான செயற்குழுவால் (எடுக்கப்பட்ட முன்னுரிமைகள் மூலம் வளரும் நாடுகளின் கவலைகளை நிவர்த்தி செய்வதில் ஜி 20 இன் முக்கியத்துவத்தை எடுத்துக்காட்டுகிறது. பருவநிலை நடவடிக்கைகள் மட்டுமல்லாது அதற்கும் அப்பாற்பட்ட காரணங்களுக்காகவும் நிதி திரட்டுதல் மற்றும் நிலையான நிதியை அளவிடுவதற்கான திறன் மேம்பாட்டு நடவடிக்கைகள் ஆகியவை இதில் அடங்கும். இந்த பட்டறையில் இந்தியாவில் சமூக தாக்க முதலீட்டை அதிகரிப்பது மற்றும் அனுபவப் பகிர்வு மற்றும் நீடித்த நிதிக்கான சுற்றுச்சூழல் அமைப்பின் திறனை வளர்ப்பது குறித்து இரண்டு குழு விவாதங்கள் நடைபெற்றன. குழு விவாதங்களை ரிசர்வ் வங்கியின் பொதுமேலாளர் திரு. பிரிஜ் ராஜ் நடத்தினார். குழுவில் மூத்த தொழில் வல்லுநர்கள் மற்றும் அதிகாரிகள் கலந்து கொண்டனர். சமூக தாக்க முதலீடுகள், சமூக திட்டங்களுக்கு தனியார் மூலதனத்தை ஈர்ப்பது மற்றும் சமூகப் பங்கு பரிவர்த்தனை பற்றிய விவாதங்கள் முதன்முறையாக எடுத்துக் கொள்ளப்பட்டன. வளர்ந்த மற்றும் வளரும் நாடுகள் எவ்வாறு ஒரு நிலையான எதிர்காலத்திற்காக ஒத்திசைவான மற்றும் ஒருங்கிணைந்த முறையில் முன்னோக்கிச் செல்ல இணைந்து செயல்பட முடியும் என்பது பற்றிய விவாதமும் நடைபெற்றது. விழிப்புணர்வுக்கான திறன் மேம்பாடு மற்றும் நிலையான நிதியுதவிக்கான சுற்றுச்சூழலைக் கட்டியெழுப்புவதில் சந்தையாளர்களின் செயலில் பங்கேற்பதற்கான உத்வேகமும் விவாதிக்கப்பட்டது. பயிலரங்கில் உள்ள குழுக்கள், ஒழுங்குமுறைகள், கொள்கை வகுப்பதில் உள்ள முன்னேற்றங்கள், நேர்மறையான சமூக தாக்கங்களுக்கு தனியார் நிதி திரட்டுவதற்கான வெற்றிக் கதைகள் குறித்து விரிவாக விவாதித்தனர்.
இந்நிகழ்வில் 200 பங்கேற்பாளர்கள் கலந்து கொண்டனர். இந்திய அரசின் நிதி அமைச்சகத்தின் அதிகாரிகள், திருமதி உமா சங்கர், மண்டல இயக்குநர், (RBI), சென்னை, திரு. K. பாபுஜி, முதல்வர், (RBSC), சென்னை, திரு. அமித் சின்ஹா, பொது மேலாளர், ரிசர்வ் வங்கி உள்ளிட்டோரும் இந்நிகழ்ச்சியில் பங்கேற்றனர். இந்த நிகழ்வில் வணிக வங்கிகள், சிறு நிதி வங்கிகள், முதலீட்டு நிறுவனங்கள் போன்றவற்றின் பங்கேற்பும் இருந்தது. துறை சார்ந்த மாணவர்களும் ஆசிரியர்களும் பங்கேற்றனர்.
***
AD/CJL/DL
(Release ID: 1933146)
Visitor Counter : 144