கனரகத் தொழில்கள் அமைச்சகம்
பிரதமர் மோடியின் தொலைநோக்கு தலைமையின் கீழ் தற்சார்பு இந்தியா செயல்பாடு அதிகரித்துள்ளது என்கிறார் டாக்டர் மகேந்திர நாத் பாண்டே
Posted On:
15 JUN 2023 7:01PM by PIB Chennai
மோடி அரசின் ஒன்பது ஆண்டுகால நிறைவு குறித்து குறிப்பிட்ட மத்திய கனரக தொழில்துறை அமைச்சர் டாக்டர் மகேந்திர நாத் பாண்டே, மோடி அரசின் சிறப்பான கொள்கைகள், வலிமையான மற்றும் பசுமைமிக்க இந்தியாவை கட்டமைப்பதாகக் கூறியுள்ளார். பிரதமர் திரு நரேந்திர மோடியின் தொலைநோக்கு தலைமையின் கீழ், நாடு பெரும் எழுச்சியடைந்துள்ளதாக அவர் தெரிவித்தார். பிரதமர் நரேந்திர மோடியின் தொலைநோக்குப் பார்வையில் தற்சார்பு இந்தியா என்பது முக்கிய நோக்கமாக இருக்கும் நிலையில், உற்பத்தித்துறை பெரும் பங்களிப்பை அளித்துள்ளதாக அவர் குறிப்பிட்டார். மேக் இன் இந்தியா, தற்சார்பு இந்தியா போன்ற திட்டங்கள் மூலம் உற்பத்தித் துறையின் முக்கியத்துவம் குறித்து அரசு ஏற்கனவே சுட்டிக் காட்டியுள்ளதாகத் தெரிவித்தார்.
கனரக தொழில்துறை அமைச்சகம், தற்சார்பு இந்தியாவையொட்டி, விரைவாக செயலாற்றி வருவதால், அதன் மூலம் நேர்மறையான முடிவுகள் கிடைப்பதாக அவர் கூறினார்.
உற்பத்தியுடன் கூடிய ஊக்குவிப்புத் திட்டத்தால், 5 ஆண்டுகளில் 1.48 லட்சம் வேலைவாய்ப்புகள் ஏற்படுத்தப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்தார். விரைவான மின்சார வாகனங்கள் உற்பத்தித் திட்டத்தின் இரண்டாம் கட்டத்தில் 5.80 லட்சம் மின்சார இரு சக்கர வாகனங்களும், 74 ஆயிரத்து 63 மூன்று சக்கர மின்சார வாகனங்களும், 6784 நான்கு சக்கர மின்சார வாகனங்களும், 3738 மின்சார பேருந்துகளும், விற்பனை செய்யப்பட்டதாக அவர் குறிப்பிட்டார்.
மின்சார வாகனங்கள் மூலம் நாட்டின் 49 கோடி கிலோ கிராம் கார்பன் வெளியீடு குறைக்கப்பட்டதாக அவர் கூறினார். அத்துடன், 34 கோடி லிட்டர் பெட்ரோல் மற்றும் டீசல் சேமிக்கப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்தார். நெடுஞ்சாலைகளில் உள்ள பெட்ரோல் நிலையங்களில் மின்சார வாகனங்களுக்காக 7432 மின்னேற்றி நிலையங்களை அமைக்க அரசு 800 கோடி ரூபாய் ஒதுக்கியுள்ளதாகவும் டாக்டர் மகேந்திர நாத் பாண்டே குறிப்பிட்டார்
மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கில செய்திக்குறிப்பைக் காணவும்: https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1932694
***
AD/IR/RS/GK
(Release ID: 1932710)
Visitor Counter : 153