சிறப்பு சேவைகள் மற்றும் கட்டுரைகள்
azadi ka amrit mahotsav

உணவு உற்பத்தியில் இந்தியா குறிப்பிடத்தக்க வளர்ச்சியை எட்டியுள்ளது

Posted On: 09 JUN 2023 5:36PM by PIB Chennai

2022-23-ல் இந்தியாவின் முதன்மையான பயிர் வகைகள் உற்பத்தியில் 3-வது முன்மதிப்பீட்டின்படி, உணவு தானிய உற்பத்தி 3,305.34 லட்சம் டன் இருக்கும் என்று மதிப்பிடப்பட்டுள்ளது. 2013-14-ல்  இருந்த 2,650.47 லட்சம் டன் என்பதோடு ஒப்பிடுகையில் இது 650 லட்சம் டன்  அதிகமாகும்.

கடந்த பல ஆண்டுகளாக அரிசி, கோதுமை, சோளம், பயறு வகைகள், பருப்பு வகைகள் போன்ற முக்கியமான உணவு தானியங்களின் உற்பத்தி அளவு குறிப்பிடத்தக்க வகையில் இந்தியாவில் அதிகரித்து வந்துள்ளது. இந்த வளர்ச்சி, உணவுப் பாதுகாப்பை உறுதிப்படுத்துவதோடு விவசாயிகளின் பொருளாதாரப் பாதுகாப்பு மற்றும் நிலைத்தன்மையையும் உறுதிப்படுத்துகிறது.

மோட்டா ரக தானியங்களின் உற்பத்தி அதிகரிப்பு நாட்டில் ஊட்டச்சத்து தானியங்களை அதிகரிக்கச் செய்வதில் முக்கியத்துவம் பெற்றுள்ளது. விவசாயிகள் சார்பான அரசின் கொள்கைகள் மற்றும் விவசாயிகள், விஞ்ஞானிகளின் அர்ப்பணிப்பு ஆகியவற்றால் இந்தியாவில் வேளாண் துறை தொடர்ந்த வளர்ச்சியை அடைந்திருப்பதோடு வரும் ஆண்டுகளில் மேலும் வளர்ச்சி அடையும்.

இந்த மதிப்பீடுகள் இந்திய வேளாண் துறையின் முன்னேற்றம் மற்றும் திறன் பற்றிய முக்கிய குறியீடாக உள்ளது. மேலும் வேளாண் உற்பத்தியில் தன்னிறைவு அடைவது, விவசாயிகளின் வருவாயை இரட்டிப்பாக்குவது என்ற நாட்டின் உறுதிப்பாட்டையும் எடுத்துக்காட்டுகிறது.

------

AP/SMB/KPG/GK


(Release ID: 1931105)
Read this release in: English