வணிகம் மற்றும் தொழில்துறை அமைச்சகம்
பிரதமரின் விரைவு சக்தி திட்டத்தின் கீழ் செயல்படும் இணைப்புத் திட்டமிடல் குழு அதன் 49வது அமர்வில் திரிபுரா சாலைவழி திட்டத்தை பரிந்துரைத்தது
Posted On:
09 JUN 2023 3:57PM by PIB Chennai
பிரதமரின் விரைவு சக்தி தேசிய திட்டத்தின் 49வது இணைப்பு திட்டமிடல் குழு கூட்டம் திரிபுராவில் சாலைவழித் திட்டத்தைப் பரிந்துரைத்துள்ளது. நேற்று புதுதில்லியில் நடைபெற்ற இக்கூட்டத்திற்கு தொழில் மற்றும் உள்நாட்டு வர்த்தக மேம்பாட்டுத் துறையின் தளவாடப் பிரிவு சிறப்புச் செயலர் திருமதி சுமிதா தவ்ரா தலைமை தாங்கினார்.
கோவாய்-தெலியமுரா-ஹரினாவில் 134.9 கிமீ நீளம் கொண்ட சாலைப் பகுதியை மேம்படுத்தவும், திரிபுராவில் NH-208 இன் நடைபாதையை விரிவுபடுத்தவும் இக்கூட்டத்தில் பரிசீலிக்கப்பட்டது. இதன் மொத்த மதிப்பு ரூ.2,486 கோடி ஆகும்.
இந்த சாலை கோவாய், கோமதி மற்றும் தெற்கு திரிபுரா மாவட்டங்கள் வழியாக கோவாய், தெலியமுரா, ட்விடு, அமர்பூர், கர்புக் மற்றும் திரிபுராவின் ஹரினா போன்ற இடங்களை இணைக்கிறது. இது அஸ்ஸாம் மற்றும் திரிபுராவில் மாநிலங்களுக்கு இடையேயான இணைப்பை மேம்படுத்துவது மட்டுமல்லாமல், திரிபுராவில் பொருளாதார மற்றும் தொழில்துறை நடவடிக்கைகளுக்கு ஊக்கமளிக்கும்.
இந்தத் திட்டத்தின் மூலம் பெயர்ச்சிமை செயல்திறன் மேம்பாடு, பிராந்திய இணைப்பு,
பொருளாதார மற்றும் சமூக இணைப்பு,
தொழில் மற்றும் ஏற்றுமதி மேம்பாட்டு ஊக்கம்,
பழங்குடியினர் பகுதியில் வளர்ச்சி உள்ளிட்ட நன்மைகள் ஏற்படும்.
மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கில செய்திக்குறிப்பை காணலாம் : https://pib.gov.in/PressReleseDetailm.aspx?PRID=1931012
***
(Release ID: 1931070)
Visitor Counter : 183