சிறப்பு சேவைகள் மற்றும் கட்டுரைகள்
மின்னணுப் பொருட்களின் ஏற்றுமதி பெருமளவு அதிகரிப்பு
Posted On:
08 JUN 2023 3:47PM by PIB Chennai
2014- ஆண்டு ரூ.38,263 கோடியாக இருந்த மின்னணுப் பொருட்களின் ஏற்றுமதி பாய்ச்சல் வேகத்தில் 400% அதிகரித்து 2023, ஜனவரியில் ரூ. 1,92,527 கோடியாகியுள்ளது. 2021-22 நிதியாண்டின் போது (ஏப்ரல்-மார்ச்) 15.66 பில்லியன் அமெரிக்க டாலராக இருந்த மின்னணு பொருட்களின் ஏற்றுமதி 50.52% அதிகரித்து நிதியாண்டு 2022-23 நிதியாண்டில் (ஏப்ரல்-மார்ச்) 23.57 பில்லியன் அமெரிக்க டாலராகப் பதிவாகியிருந்தது.
உலகளவில் மின்னணுப் பொருட்கள் உற்பத்தித் தொழில் துறை போட்டித் தன்மையுடன் விளங்குவதற்கேற்ப மின்னணுப் பொருட்கள் குறித்த தேசியக் கொள்கை 2019 வெளியிடப்பட்டது. இதன் அடிப்படையில் பெருமளவில் மின்னணுப் பொருட்கள் உற்பத்தி செய்வதற்கு உற்பத்தியுடன் இணைந்த ஊக்குவிப்புத் திட்டம், மின்னணு சாதனங்கள் மற்றும் செமிகண்டக்டர்கள் உற்பத்தி மேம்பாட்டுத்திட்டம், நவீனமாக்கப்பட்ட மின்னணுப் பொருட்கள் உற்பத்திக்கான தொகுப்புத்திட்டம் (இஎம்சி 2.0) தகவல் தொழில்நுட்ப வன்பொருளுக்கு உற்பத்தியுடன் இணைந்த ஊக்குவிப்புத்திட்டம் ஆகியவை மின்னணு தொழில் துறையை மேம்படுத்த அறிமுகம் செய்யப்பட்டன.
***
AP/SMB/RS/GK
(Release ID: 1930803)