பெட்ரோலியம் மற்றம் இயற்கை எரிவாயு அமைச்சகம்
ஹைட்ரோ கார்பன் தொழிலில் மேற்கொள்ளப்பட்டுள்ள சாதனை சீர்திருத்தங்கள்: ஹர்தீப் சிங் பூரி
Posted On:
08 JUN 2023 3:30PM by PIB Chennai
இந்தியா ஹைட்ரோ கார்பன் தொழில் வளர்ச்சியின் புதிய பாதையை நோக்கி முன்னேறிக் கொண்டிருக்கிறது. 2022-23-ல் 7.2 சதவீத பொருளாதார வளர்ச்சி இந்தியாவின் பொருளாதார முன்னேற்றத்தை பிரதிபலிக்கிறது என்று மத்திய பெட்ரோலியம், இயற்கை வாயு, வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற விவகாரங்கள் துறை அமைச்சர் திரு ஹர்தீப் சிங் பூரி கூறியுள்ளார்.
இந்திய பெட்ரோலிய தொழில் கூட்டமைப்பின் (எஃப்ஐபிஐ) 2022 எண்ணெய் மற்றும் வாயு விருதுகள் வழங்கும் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு அமைச்சர் உரையாற்றினார். இந்த நிகழ்ச்சியில் மத்திய பெட்ரோலியம் மற்றும் இயற்கை வாயு, தொழிலாளர் மற்றும் வேலைவாய்ப்புத்துறை இணையமைச்சர் திரு.ராமேஸ்வர் தெலி, பெட்ரோலியம் மற்றும் இயற்கை வாயு அமைச்சகத்தின் செயலர் திரு பங்கஜ் ஜெயின் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
எஃப்ஐபிஐ-ன் எண்ணெய் மற்றும் வாயு விருதுகள் கடந்த சில ஆண்டுகளாக வழங்கப்பட்டு வருகின்றன. பல்வேறு பிரிவுகளில் வழங்கப்படும் விருதுகள், இத்துறையில் சிறப்பாக செயல் புரிந்தவர்களுக்கு வழங்கப்படுகின்றன.
இந்த நிகழ்ச்சியில் உரையாற்றிய அமைச்சர், எரிசக்தி மாற்றத்தில் 2070 ஆம் ஆண்டுக்குள் பூஜ்ய உமிழ்வை எட்டுவதை நோக்கமாகக் கொண்டு இந்தியா லட்சியப்பயணம் மேற்கொண்டுள்ளது. பாரீஸ் பிரகடனத்தை செயல்படுத்துவதில் ஜி20 நாடுகளிலேயே ஒரே நாடாக இந்தியா உள்ளது. இந்தச் சூழலில் மத்திய அரசு ஹைட்ரோ கார்பன் தொழிலில் பல்வேறு சீர்திருத்தங்களை மேற்கொண்டுள்ளது என்று கூறினார்.
மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கிலச் செய்திக்குறிப்பைக் காணவும்: https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1930751
***
(Release ID: 1930785)