சிறப்பு சேவைகள் மற்றும் கட்டுரைகள்
தலைமைக் கணக்கு தணிக்கை அதிகாரியின் அறிக்கை இன்று தமிழ்நாடு ஆளுநரிடம் வழங்கப்பட்டது
Posted On:
07 JUN 2023 5:05PM by PIB Chennai
2022- மார்ச் 31 உடன் முடிவடைந்த ஆண்டுக்கான தமிழ்நாடு அரசின் தணிக்கை செய்யப்பட்ட அறிக்கையை தலைமைக் கணக்கு தணிக்கை அதிகாரி இன்று (07.06.2023) மாண்புமிகு தமிழ்நாடு ஆளுநரிடம் அளித்தார். இந்த அறிக்கை மாநில சட்டப்பேரவையில் தாக்கல் செய்யப்படும்.
தமிழ்நாடு சட்டப்பேரவையில் தாக்கல் செய்ய தலைமைக் கணக்கு தணிக்கை அதிகாரி, தணிக்கை அறிக்கையை ஆளுநரிடம் அளிக்க இந்திய அரசியல் சட்டம் பிரிவு 151(2) வகை செய்கிறது.
முதன்மை தலைமைக் கணக்கு அதிகாரி திரு சி.நெடுஞ்செழியன் வெளியிட்ட செய்திக் குறிப்பில் இதனை தெரிவித்துள்ளார்.
***
(Release ID: 1930517)
Visitor Counter : 185