மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்பம்
இந்திய தகவல் தொழில்நுட்ப தொழில் துறை வளர்ச்சிக்கான வழிவகைகள் மற்றும் தொழில் சூழல் முறையை உருவாக்குவதுத் தொடர்பாக கருத்தரங்கை இந்திய மென்பொருள் தொழில்நுட்ப பூங்கா அதன் 32-வது நிறுவன தினத்தில் நடத்தியது
प्रविष्टि तिथि:
05 JUN 2023 5:21PM by PIB Chennai
இந்திய தகவல் தொழில்நுட்ப தொழில் துறை வளர்ச்சிக்கான வழிவகைகள் மற்றும் தொழில் சூழல் முறையை உருவாக்குவதுத் தொடர்பாக கருத்தரங்கை இந்திய மென்பொருள் தொழில்நுட்ப பூங்கா அதன் 32-வது நிறுவன தினத்தில் நடத்தியது. இதில் மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சக செயலாளர் திரு அல்கேஷ் குமார் சர்மா கலந்து கொண்டு இந்திய மென்பொருள் தொழில்நுட்ப பூங்காவின் 32 ஆண்டு கால பணிக்கு வாழ்த்து தெரிவித்தார்.
தகவல் தொழில்நுட்ப வளர்ச்சி ஆறு தூண்கள் குறித்து பட்டியலிட்ட அவர், மின்னணு மாற்றம் குறித்து உலகில் தற்போது பேசப்படுவதாகவும், இந்தியா மின்னணு நிர்வாகத்தில் இருந்து டிஜிட்டல் நிர்வாகத்திற்கு மாறி வருவதாகக் கூறினார். இணைப்பு, விலைக்குறைவான தரவு, விலை குறைந்த உபகரணங்கள், மக்களுக்கேற்ற கொள்கைகள், எதிர்காலத்திற்கு தேவையான தயார் நிலை மற்றும் இணையதள பாதுகாப்பு ஆகியவை தகவல் தொழில்நுட்பத்துறையில் இந்தியா, சிறந்து விளங்குவதற்கு காரணமாகும் என்று அவர் குறிப்பிட்டார்.
மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கில செய்திக்குறிப்பைக் காணவும்:https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1929959
****
AD/IR/RS/GK
(रिलीज़ आईडी: 1929999)
आगंतुक पटल : 231