வணிகம் மற்றும் தொழில்துறை அமைச்சகம்
2023 ஏப்ரல் மாதத்திற்கான 8 முக்கிய உற்பத்தித் துறைகளின் சராசரி வளர்ச்சி விகிதம் 3.5 சதவீதம் அதிகரிப்பு
இடுகை இடப்பட்ட நாள்:
31 MAY 2023 5:00PM by PIB Chennai
2023 ஏப்ரல் மாதத்தில் முந்தையை 2022 ஏப்ரல் மாதத்தை ஒப்பிடுகையில், 8 முக்கிய உற்பத்தித் துறைகளின் வளர்ச்சி விகிதம் 3.5 சதவீதம் அதிகரித்துள்ளது.
உரம், எஃகு, சிமெண்ட், நிலக்கரி ஆகிய துறைகளின் உற்பத்தி கடந்த ஆண்டு ஏப்ரல் மாதத்தை ஒப்பிடுகையில், இந்த ஆண்டு அதிகரித்துள்ளது. கச்சா எண்ணெய், இயற்கை எரிவாயு, பெட்ரோலிய சுத்திகரிப்புப் பொருட்கள், மின்சாரம் ஆகியவற்றின் உற்பத்தி சற்று சரிந்துள்ளது.
நிலக்கரி உற்பத்தி முந்தைய ஆண்டைக் காட்டிலும் 9 சதவீதமும், உர உற்பத்தி 23.5 சதவீதமும், எஃகு உற்பத்தி 12.1 சதவீதமும், சிமெண்ட் உற்பத்தி 11.6 சதவீதமும் அதிகரித்துள்ளது.
கச்சா எண்ணெய் உற்பத்தி 3.5 சதவீதமும், இயற்கை எரிவாயு உற்பத்தி 2.8 சதவீதமும், பெட்ரோலிய சுத்திகரிப்புப் பொருட்களின் உற்பத்தி 1.5 சதவீதமும், மின்னுற்பத்தி 1.4 சதவீதமும் குறைந்துள்ளது.
******
AP/PLM/RS/KRS
(வெளியீட்டு அடையாள எண்: 1928762)
வருகையாளர் எண்ணிக்கை : 192